நீங்க மட்டும் பாலிவுட் போலாம்… அவரு போக கூடாதா? ஜவானில் அட்லீ செய்த தில்லாலங்கடி!

Jawan atlee: அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், எப்போதும் போல அவர் காப்பி அடித்திருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது இன்னொரு பிரச்னையும் உருவாகி இருக்கிறது.

அட்லீ தன்னுடைய 4 படங்களை கோலிவுட்டில் முடித்துக்கொண்டு நேரடியாக பாலிவுட்டில் களமிறங்கினார். அதுவே பலருக்கு பெருமையான விஷயமாக இருந்தது. அதை தொடர்ந்து படத்தின் பெயர் ஜவான் என அறிவிக்கப்பட்டது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என தமிழ் சினிமா பட்டாளங்களே இணைந்தனர்.

இதையும் படிங்க: தேவர் மகனில் கமல் செய்த சித்து வேலை!.. கண்டுபிடிச்சி திட்டிய சிவாஜி!.. நடந்தது இதுதான்!..

இதை தமிழ் படமாகவே சினிமா உலகம் கொண்டாடியது. பல எதிர்பார்ப்புடன் கடந்த 7ந் தேதி வெளியான இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 500 கோடியை தாண்டி இருக்கிறது. இப்படத்திலும் அட்லீயை ட்ரேட்மார்க் பிரச்னையான காப்பி கேட் என கலாய்த்து வருகின்றனர்.

10க்கும் அதிகமான தமிழ் படங்களின் காப்பி தான் ஜவான் என இணையத்தில் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். இதைப்போல, இன்னும் ஒரு பிரச்னையும் எழுந்து இருக்கிறது. ஃபேன் இந்தியா படமான ஜவானில் எல்லாரும் அப்படியே இருக்க காமெடி நடிகர் யோகி பாபு தமிழ் வெர்சனில் மட்டுமே நடித்தாராம்.

இதையும் படிங்க: மீண்டும் அந்தமாதிரி படமா? மலையாள நடிகையை கோர்த்து விட்டு எஸ்கேப் ஆன கீர்த்தி சுரேஷ்

 

Related Articles

Next Story