Connect with us

Cinema History

என் நாயகிகள் மீது பொசசிவ்னஸ் எனக்கு ஜாஸ்தி… விடவே மாட்டேன் அவங்கள… இயக்குனர் பாலா

தமிழ் சினிமாவின் டெரர் இயக்குனர் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு பாலா பெயரை தான் பலரும் கூறுவார்கள். தனக்கென தனி ஸ்டைலை வைத்திருப்பார். அவரின் படங்களை பார்க்கவே தனி தைரியம் தான் வேண்டும். 

பாடலாசிரியர் அறிவுமதி மூலம் பாலமகேந்திராவிற்கு அறிமுகமானவர் தான் பாலா. அவருடன் இணைந்து பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பின்னர் அவர் சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக எண்ட்ரி கொடுக்கிறார். தமிழ் சினிமா பார்த்து பழக்கப்பட்ட கதையை விடுத்து சேது படம் வித்தியாச ரூட் பிடித்தது. ஹீரோ மனநோயாளியாக்கி படம் முழுவதும் வர வைத்து படத்தினை ஹிட்டும் கொடுத்தார். 

இதையும் படிங்க: கடன் பிரச்னையால் முடங்கிய அயலான்… படத்தின் கதையும் இணையத்தில் கசிந்ததா?

10 வருடமான தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்த விக்ரமிற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 16 விநியோகிஸ்தர்கள் முதல் சேது படத்தினை வெளியிட மறுத்து விட்டனர். பின்னர் சாதாரண பட்ஜெட்டில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளை கடக்கும் போது மிகப்பெரிய பாராட்டுகளை பெற துவங்கியது. படம் மெகா ஹிட்டானது.

அதற்கடுத்து அவர் இயக்கத்தில் வெளியான எல்லா படங்களுமே மிகப்பெரிய அளவில் வசூல் படைத்தது. அப்படங்களுமே எல்லா விருது விழாக்களிலும் நாமினி வரை இருந்தது. பாலா படத்தில் நடித்து விட்டால் போதும் வாழ்க்கை மாறி விடும் என்ற நம்பிக்கையில் ஹீரோக்கள் அவர் கேட்டாலே ஓகே சொல்லி விடும் நிலைக்கு தன்னை உயர்த்தினார்.

இதையும் படிங்க : என்னோட வேற முகத்தை லியோ படத்தில் பார்ப்பீங்க… சூப்பர் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

ஆனால் அவரை சுற்றி சர்ச்சைகளும் இருந்து வந்தது. நான் கடவுள் படத்துக்கு அஜீத்தினை புக் செய்து அது பெரிய அளவில் சர்ச்சையானது. பின்னர் அந்த படத்தில் ஆர்யாவை வைத்து நடிக்க வைத்தார். இருந்தாலும் படம் பெரிய அளவில் வரவேற்பினை பெறவில்லை என்பதே உண்மை. 

இந்நிலையில் பாலாவிடம் சமீபத்திய பேட்டியில் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. உங்கள் படங்களில் பெரும்பாலும் ஹீரோயின்கள் இறந்து விடுங்கின்றனர். ஏன்? முக்கியமாக நான் கடவுள்,சேது, நந்தா படங்களில் கடைசியில் நடிகைகள் இறந்து விடுவதற்கு காரணம் என்ன எனக் கேட்டனர். அதற்கு பதில் அளித்த பாலா எனக்கு என் நாயகிகள் மீது அதீத அன்பு அதன் காரணமாக இருக்கலாம் என பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top