Connect with us
director bala

Cinema History

எல்லாரையும் வச்சு செய்ற பாலாவையே கதற விட்ட சம்பவம்!… இப்படியா பழிவாங்குவீங்க!..

Director Bala; தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இவரின் படங்கள் அனைத்துமே பார்ப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவைக்கும்படி இருக்கும்.

இவர் தமிழில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் பாதி படத்தை இயல்பாக காண்பித்து அடுத்த பாதியில் விக்ரமை காட்டும் காட்சிகள் நமது கண்களில் இருந்து கண்ணீரை வரச்செய்யும். இப்படம் விக்ரமிற்கு தனி பெயரையே சம்பாதித்து கொடுத்தது என கூறலாம்.

இதியும் வாசிங்க:ஸ்மைலி பந்தை வைத்து இப்படியும் பயமுறுத்த முடியுமா?.. திகிலை கிளப்பிய ஜெயம் ரவியின் இறைவன் சீன்!..

மேலும் இவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற படங்கள் இவருக்கென தனி வழியை உருவாக்கி தந்தன. பாலா படம் என்றாலே இவ்வாறுதான் இருக்கும் எனும் எண்ணத்தை உருவாக்கின. இவர் தற்போது தனது சொந்த தயாரிப்பில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக சூர்யா இப்படத்தில் இருந்து விலகி கொண்டார்.

மேலும் இவரது படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அந்த படத்திற்காக கடினமாய் உழைக்க வேண்டியிருக்கும். இவர் படம் என்றாலே நடிப்பவர்களுக்கு கதி கலங்கும். ஆனால் அதே சமயம் படமும் வெற்றி அடையும். இவர் தனது படங்களில் நடிகர்களை இயல்பாய் இருக்கும் தோற்றத்தைவிட சற்று வித்தியாசமான தோற்றத்திலேயே காண்பிப்பார்.

இப்படியான இயக்குனரையே சண்டிவீரன் திரைப்படத்தில் நடந்த ஒரு சம்பவம் கண் கலங்க வைத்துவிட்டது. இவரது தயாரிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் சண்டிவீரன். இப்படத்தினை இயக்குனர் சற்குணம் இயக்கினார். இப்படத்தில் ஹீரோவாக அதர்வாவும் அவருக்கு ஜோடியாக ஆனந்தியும் நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் தாய்பாலும் தண்ணீரும் பாடல் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதியும் வாசிங்க:லியோ ஆடியோ லான்ச்தான் இல்ல!.. இதையாவது செய்யுங்க ப்ளீஸ்!.. கதறும் விஜய் ஃபேன்ஸ்…

இப்பாடலை எழுதியவர் இளம் பாடலாசிரியர் மோகன்ராஜன். இவர் ஒரு இயற்கை ஆர்வலர். இயக்குனர் சற்குணம் இப்படத்தில் தண்ணீரை பற்றிய பாடல் ஒன்றை எழுதி தருமாறு மோகன்ராஜனிடம் கேட்டுள்ளார். அவரும் தாய்பாலும் தண்ணீரும் ஒண்ணாதான் இருந்துச்சு பாடலை எழுதி கொடுத்துள்ளார். இப்பாடலை சின்னபொண்ணு மற்றும் அந்தோனிதாஸ் பாடியுள்ளனர்.

இப்பாடலின் எடிட்டிங்கின் போது அங்கு பாலா வந்துள்ளார். பாடல் பாடி முடித்து இசையமைத்து முடித்தபின் அந்த அறையின் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு பாடலை போட்டு காட்டியுள்ளனர். பின் மின்விளக்குகளை ஆன் செய்த பின் பாலாவை பார்த்தால் அவர் கண்களில் கண்ணீருடன் இருந்தாராம். மேலும் திரும்ப திரும்ப மின் விளக்குகளை அணைத்து பாடலை கேட்டாராம். என்ன ஒரு வரிகள் என் கண்ணே கலங்கிவிட்டது என அப்பாடலை எழுதியவரையும் பாடியவர்களையும் பாராட்டினாராம். கொடூரமான காட்சிகளை படமாய் இயக்கும் பாலாவையே அழவைத்த அந்த பாடல்வரிகள் மிகப்பெரிய அளவில் வெற்றியையும் பெற்றது.

இதியும் வாசிங்க:பஞ்சாயத்தே வேணாம்!. லியோ இசை வெளியீட்டு விழா ரத்து!.. உண்மையான காரணம் இதுதானா?!…

google news
Continue Reading

More in Cinema History

To Top