மிஷ்கின் தயாரித்து இசையமைத்துள்ள டெவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான பாலா, வெற்றிமாறன், ஹரி மற்றும் தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேடையில் ஏறி பேசிய பாலா இயக்குநர் மிஷ்கினை பாராட்டி பேசியுள்ளார். மிஷ்கின் என்னைப் பற்றி நிறைய பேசிவிட்டான். இளையராஜா மிஷ்கினை பற்றி சொன்ன சம்பவம் ஒன்று இருக்கு, அவருடைய ஸ்டூடியோவில் என் படத்துக்காக இசையமைக்க போயிருந்தேன்.
இதையும் படிங்க: கோயிலில் நுழைய எம்ஜிஆர் பட இயக்குனருக்கு போடப்பட்ட தடை! அதையும் மீறி எப்படி படமாக்கினார் தெரியுமா?
அப்போது ஒருத்தர் ஷார்ட்ஸ் மாட்டிக் கொண்டு, சம்பந்தமே இல்லாத இரு வேறு செருப்பை போட்டுக் கொண்டு அங்குட்டும் இங்குட்டும் ஓடிக் கொண்டிருந்தான். நான் இளையராஜா சாரை பார்த்து யார் இவன் என ஒரு மாதிரி கேட்டேன்.. அவனை சாதாரணமா எடப்போடாத அவன் மிகப்பெரிய இண்டெலக்சுவல் என்றார். அப்போது அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாருன்னு எனக்கு புரியல, அதன் பின்னர் மிஷ்கின் உடன் இணைந்து பணியாற்றும் போது தான் அவன் நிஜமாவே ஒரு டெவில் என்பதை தெரிந்து கொண்டேன்.
அவனுக்கு முன்பாக நான் எல்லாம் ஒரு ஆளே கிடையாது என இயக்குநர் பாலா மேடையில் மிஷ்கினை பாராட்டி பேசியதும், ஓடி வந்து அண்ணா என கட்டிப் பிடித்துக் கொண்ட மிஷ்கின், இவருடைய வணங்கான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளேன் என்றார். உதவி இயக்குநர் எல்லாம் இல்லை, இயக்குநராகவே ஒர்க் பண்ணியிருக்கான். ஒரு சீனை அவனே கம்போஸ் பண்ணி இயக்கியிருக்கான் என வணங்கான் பட அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தளபதி 68க்கு நோ சொன்ன ஜோதிகா!.. இப்போ 70 வயது நடிகரை கட்டிப்பிடித்துக் கொண்டு அப்படியொரு போஸ்!
ஏ ஆர்…
தமிழ் சினிமாவில்…
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…