Connect with us
bala vikram

Cinema News

பிதாமகனில் நடந்த பஞ்சாயத்து!… விக்ரமை தூக்கிட்டு அந்த நடிகரை போட நினைத்த பாலா!..

சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே அதிரவைத்தார். பல வருடங்களாய் பல திரைப்படங்களில் நடித்தும் கவனிக்கப்படாத நடிகராக இருந்த விக்ரம் இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதோடு, படத்தின் இறுதி அரைமணி நேர காட்சிகளில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் விக்ரம் நிரூபித்தார்.

படத்தின் இறுதி காட்சிக்காக உடலை குறைத்து அந்த காட்சியில் நடித்தார். அதன்பின் தூள், சாமி உள்ளிட்ட படங்களில் நடித்து தான் ஒரு கமர்ஷியல் நடிகர் என்பதையும் நிரூபித்தார். சாமி படத்தின் மெகா வெற்றி அவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. அதன்பின் பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

இதையும் படிங்க: அரசியலுக்கு வருகிறாரா ஆர்.ஜே.பாலாஜி?.. சின்னத்தை கூட முடிவு செய்து விட்டாராம்..

பிதாமகன், காசி, அந்நியன், ஐ உள்ளிட்ட பல படங்களில் கதாபாத்திரத்திற்காக தன் உடலை உருக்கி நடித்தார். பிதாமகன் படத்தில் அதிக வசனம் இல்லாமல் வெறும் முகபாவனை மட்டுமே காட்டி நடித்தார். அந்த படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசியவிருதையும் பெற்றார்.
பாலா என்றால் பல நடிகர்களுடன் பஞ்சாயத்து இழுப்பார். ஏனெனில் அவர் நடிகர்களை மதிக்கவே மாட்டார். திட்டமிட்டு படமெடுக்கவும் மாட்டார். 3 மாதங்களில் எடுக்க வேண்டிய படத்தை ஒரு வருடம் எடுப்பார். இதனால், அந்த நடிகர்கள் வேறுபடங்களில் நடிக்க முடியாமல் போகும்.

நான் கடவுள் படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி தலைமுடி, தாடி வளர்த்து பாலாவுக்காக காத்திருந்தார். ஆனால், பாலா அப்படத்தை எடுக்க தாமதமானதால் அந்த படத்திலிருந்து விலகினார். இதில், கோபமடைந்த பாலா அவரை கூப்பிட்டு பஞ்சாயத்து பேசி அவரை அசிங்கப்படுத்திய சம்பவமும் நடந்தது.

இதையும் படிங்க: என்னதான் உலக நாயகனா இருந்தாலும் அதுல என்னவோ லேட்தான்! அப்பவே கமலின் சாதனையை முறியடித்த நம்பியார்

அதேபோல், பிதாமகன் படத்தின் போதும் விக்ரமுடன் அவருக்கு பஞ்சாயத்து ஏற்பட்டது. எனவே, அவரை தூக்கிவிட்டு நடிகர் முரளியை நடிக்க வைக்கலாம் எனவும் நினைத்தாராம். இதில் ஆச்சர்யம் என்னவெனில் படத்தின் தயாரிப்பாளர் துரையும் பாலாவுக்கு ஆதரவாகவே நின்றார். அதன்பின் அந்த பிரச்சனை பேசி முடிக்கப்பட்டு விக்ரமே தொடர்ந்து நடித்தார்.

அந்த தயாரிப்பாளர் இப்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், விக்ரம் சில லட்சங்கள் கொடுத்து உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அம்மா இறந்த அப்போ.. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைனு.. அப்படி செய்தேன்- வனிதா

google news
Continue Reading

More in Cinema News

To Top