அரசியலுக்கு வருகிறாரா ஆர்.ஜே.பாலாஜி?.. சின்னத்தை கூட முடிவு செய்து விட்டாராம்..

ரேடியோ ஜாக்கியாக தொடங்கி, தற்போது இயக்குநராகவும், நடிகராகவம் வலம் வந்துக்கொண்டிருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. மேலும் இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். நானும் ரவுடி தான், எல்கேஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், வீட்ல விஷேசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் அடிக்கடி பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் அரசியலுக்கு வந்தால் மைக் சின்னம் கேட்பேன் என்று தெரிவித்துள்ளார். நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? வந்தாள் என்ன சின்னம் கேட்பீர்கள் என்று நிருபர் கேள்வி கேட்டார்.

இதையும் படிங்க: என்னதான் உலக நாயகனா இருந்தாலும் அதுல என்னவோ லேட்தான்! அப்பவே கமலின் சாதனையை முறியடித்த நம்பியார்

அதற்கு பதிலளித்த ஆர்.ஜே.பாலாஜி நான் மைக் சின்னம் கேட்பேன். ஏற்கனவே என் கைகளில் மைக் படத்தை டாட்டூ போட்டிருக்கிறேன். மேலும் எனக்கு பேச மிகவும் பிடிக்கும். அதனால் மைக் சின்னம் கேட்பேன். நான் ஏற்கனவே அரசியல்வாதி தான். சமூகத்தில் என்னால் முடிந்த மாற்றங்களை நான் கொண்டுவந்துள்ளேன்.

தேர்தலில் நின்று வெற்றி பெறுவது மட்டும் அரசியல் இல்லை. மக்களுக்கு சேவை பண்ண பல வழிகள் இருக்கிறது. அரசியல்வாதி ஆவதற்கு அரசியல் கட்சி தொடங்கவேண்டும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞர் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தான்.

இதையும் படிங்க: அம்மா இறந்த அப்போ.. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைனு.. அப்படி செய்தேன்- வனிதா

நான் என் வீட்டை விட்டு தனியாக வந்துவிட்டேன். எனக்கு அப்பா இல்லை. என் தாய் வேறு ஒருவரை காதலிப்பது பிடிக்காமல் நான் வந்துவிட்டேன் என கூறியிருந்தான். நான் தாய் காதலிப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறினேன். அதன் பிறகு போன வாரம் அந்த பையனை நேரில் பார்த்தேன்.

2 வருடமாக உங்கள் பாட்கேஸ்ட் கேட்கிறேன். மிகவும் நன்றி, எனக்கு புரிந்துவிட்டது. நான் என் தாயுடன் சேர்ந்துவிட்டேன். அப்பா வீட்டில் இருக்கிறார் என்று கூறினான். இப்படி என்னால் முடிந்த சில சில மாற்றங்களை செய்யும் அரசியல்வாதி நான் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்!.. ஐயோ மொத்த அழகும் தெரியுதே!..

 

Related Articles

Next Story