Cinema History
ரஜினி பட இயக்குனரை அழவைத்த பாலச்சந்தர்!.. ஆனாலும் இவ்வளவு கோபம் வரக்கூடாது!..
பொதுவாக இயக்குனர்கள் என்றாலே படப்பிடிப்பு தளங்களில் கோபமாகவே இருப்பார்கள். ஏனெனில், தங்கள் நினைப்பது சரியாக வரவேண்டும் என நினைக்கும் போது அது நடிகராலோ, உதவி இயக்குனர்களோ அல்லது மற்ற தொழில் நுட்ப கலைஞர்களோ சொதப்பும்போது அவர்கள் கோபம் வந்துவிடும்.
படப்பிடிப்பு தளத்தில் பெரிய ஹீரோ சொதப்பினால் அவரை திட்டமுடியாது. எனவே, அந்த கோபத்தை இயக்குனர்கள் எப்போதும் உதவி இயக்குனர்களிடம்தான் காட்டுவார்கள். அதாவது, இயக்குனர்கள் அவர்களின் கோபத்தை எல்லாம் கொட்டுவதற்கு உதவி இயக்குனர்கள்தான் சிக்குவார்கள். இது பல வருடமாக சினிமாவில் இருப்பதுதான்.
இதையும் படிங்க: இதுதான் கடைசி… இனிமே பிக்பாஸ் பக்கமே வரமாட்டேன் போங்கடா… கடுப்பான கமல்ஹாசன்..!
அதேபோல், ஒரு உதவி இயக்குனர் இயக்குனரிடம் சொல்லாமல் பாதி படத்திலேயே சென்றுவிட்டால் இயக்குனர்களுக்கு உச்ச கோபம் வரும். இதை பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் சந்தித்திருக்கிறார். பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்தவர் சுரேஷ் கிருஷ்ணா. புன்னகை மன்னன் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார்.
பாலச்சந்தர் சுஹாசினியை வைத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தை இயக்கிய போது பாதி படத்தில் பாலச்சந்தரிடம் எதுவும் சொல்லாமலே போய்விட்டார் சுரேஷ் கிருஷ்ணா. அதற்கு காரணம் கமல்ஹாசன். இருவரும் சேர்ந்து சத்யா படத்தை உருவாக்கும் வேலையில் இறங்கிவிட்டனர்.
இதையும் படிங்க: மெடிக்கள் மிராக்கிள்!.. 5 வயசிலயே கமல் அப்படியா?!.. ஆச்சர்ய தகவலை சொன்ன பிரபல இயக்குனர்…
சத்யா படத்தின் பூஜைக்கு அழைக்க கமலும், சுரேஷ் கிருஷ்ணாவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பாலச்சந்தரை பார்க்க போயுள்ளனர். காலை 7 மணிக்கு போனவர்களை 9.30 மணி வரை காக்க வைத்திருக்கிறார் பாலச்சந்தர். அதன்பின் சுரேஷ் கிருஷ்ணாவிடம் மொத்த கோபத்தையும் காட்டியிருக்கிறார்.
நீ ஒரு உதவி இயக்குனாராடா?.. இப்படித்தான் ஒரு படத்தோட பாதியிலிருந்து சொல்லாம போவியா?.. வேலையில உனக்கு சின்சியாரிட்டி இருக்கா?.. உனக்கு ஹிந்தி தெரியும்ங்கற ஒரே காரணத்துக்காகத்தான் உன்ன சேர்த்துக்கிட்டேன்.. இவன் (கமல்) கூப்பிட்டா அப்படியே போய்டுவியா?.. இவன் படத்தை பண்ணும்போது ரஜினி கூப்பிட்டா அப்படியே விட்டுட்டு போய்டுவியா?’ என கத்தியுள்ளார். அதன்பின் கமல் வீட்டுக்கு போய்விட சுரேஷ் கிருஷ்ணா மட்டும் ஒரு இடத்தில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தாராம்.
இதே சுரேஷ் கிருஷ்ணாதான் கமலை வைத்து சத்யா, ஆளவந்தான் படங்களையும், ரஜினியை வைத்து வீரா, அண்ணாமலை, பாட்ஷா, பாபா ஆகிய படங்களையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமல் ஒரே நேரத்தில் இவ்ளோ படங்களை அறிவிச்சதன் பின்னணி இதுதானாம்… இப்படி கூட யோசிப்பாங்களா…?