இதுதான் கடைசி… இனிமே பிக்பாஸ் பக்கமே வரமாட்டேன் போங்கடா… கடுப்பான கமல்ஹாசன்..!

Kamalhassan: தமிழ் சினிமாவில் சாதித்ததை விட கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னைய பழைய புகழை தேடி எடுத்தார். ஆனால் தற்போது அதுவே அவருக்கு பிரச்னையாகி இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய முடிவை எடுத்து இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானவர் நடிகர் கமல். குழந்தை நட்சத்திரமாக இளைஞராக அவர் நடிப்பில் வெளியான படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். சினிமாவில் புதிய முயற்சிகளை கையாள்வதில் வல்லவர். ஆனால் அவரால் சினிமாவில் தடுமாறாமல் இருக்க முடியவில்லை.

இதையும் படிங்க: இருவேறு துறைகளில் 60 ஆண்டுகளை கடந்த ஜாம்பவான்கள்.. கமலை இந்த அளவுக்கு யாரும் பாராட்டி இருக்கவே முடியாது

ஒரு கட்டத்தில் கமல் நடிப்பில் வெளியான எல்லா படங்களும் தோல்வியை தழுவியது. அந்த நேரத்தில் தான் பிக்பாஸ் தமிழ் சீசனின் தொகுப்பாளராக களமிறங்கினார். மிரட்டலான பேச்சு, போட்டியாளர்களை அலறவிட்டே தன்னுடைய புகழை மீண்டும் உயர்த்தி கொண்டார். முக்கியமான சின்ன குழந்தைகள் கூட அவரை லைக் செய்ய தொடங்கினார்.

அந்த நேரத்தில் அவர் நடிப்பில் வெளியானது விக்ரம் திரைப்படம். மிகப்பெரிய வரவேற்பையும் வசூலை பெற்றது இப்படம். தொடர்ந்து தற்போது இந்தியன், தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் பிக்பாஸ் என வலம் வருகிறார்.

இதையும் படிங்க: சும்மா இல்லாம போய் குட்டு வாங்கிட்டு வந்த மன்சூர் அலிகான்.. த்ரிஷா வழக்கில் என்ன நடந்தது தெரியுமா?

இதனால் ஒரு எபிசோட்டில் கூட என்னை இழுக்காமல் ஒரு கண்டெண்ட் செய்ய முடியுமா பாருங்கள் என பொதுவாக சொல்லி இருப்பார். இருந்தும் அவருக்கு தொடர்ச்சியாக நெகட்டிவிட்டி அதிகரிப்பதால் இந்த சீசனுடன் பிக்பாஸில் இருந்து விலக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அடுத்த வருடம் கமலுக்கு நிறைய படங்கள் இருப்பதால் அது ஷூட்டிங்கையும் பாதிக்கும். இதனால் இனி பிக்பாஸ் பக்கம் வராமல் கூட இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. கமல் விலகினால் கண்டிப்பாக மீண்டும் சிம்பு வரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினியிடம் சிவாஜி கேட்ட அந்த கேள்வி!.. ஆடிப்போன சூப்பர் ஸ்டார்!.. நடந்தது இதுதான்!..

 

Related Articles

Next Story