Cinema History
என்ன மொழின்னே தெரியாம படமெடுத்த பாரதிராஜா!.. பல வருஷம் கழிச்சிதான் உண்மையே தெரிஞ்சுதாம்!..
பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தவர் பாலச்சந்தர். இப்படத்தில் சப்பாணியாக கமலும், மயிலாக ஸ்ரீதேவியும், பரட்டையாக ரஜினியும் நடித்திருந்தனர். செட்டுக்குள்ளேயே படமெடுத்த தமிழ் சினிமாவை பார்த்த ரசிகர்களுக்கு வெட்ட வெளியில், மரத்தடியில், ஆற்றங்கரையில், வாய்க்காலில், மணல் மேட்டில் காட்சிகளை எடுத்து காண்பித்தார் பாரதிராஜா.
ஒரு கிராமம் எப்படி இருக்கும், கிராமத்து மக்களின் வாழ்க்கை, அவர்களின் மொழி, உடல் மொழி, கோபம், ஆத்திரம், வன்மம், காதல், பகை என எல்லாவற்றையும் காட்டினார் பாரதிராஜா. அதனால்தான் அவரின் படங்களில் மக்கள் ஒன்றிப்போனார்கள். அதனால்தான் பாரதிராஜாவின் திரைப்படம் சி செண்டர்களில் சக்கை போடு போட்டது.
இதையும் படிங்க: பாரதிராஜா மனதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்!. இப்படி ஒரு தீர்க்கதரி்சியா?!..
பாரதிராஜாவின் வருகையால் செட்டுக்குள்ளேயே நடித்துவந்த எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களே தடுமாறிப்போனர்கள். இதை ஒரு மேடையில் எம்.ஜி.ஆரே கூறியுள்ளார். பல கதைகளை கையிலெடுத்து மண் மணம் மாறாமல் கொடுத்தார் பாரதிராஜா. கிராமத்து கதை மட்டுமில்லாமல் டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதையின் டைரி, கேப்டன் மகள், பொம்மலாட்டம் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளையும் இயக்கியிருக்கிறார்.
மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார். பதினாறு வயதினிலே படத்தை ஹிந்தியில் ‘சொல்வா சவான்’ (solva sawan) என்கிற பெயரில் ரீமெக் செய்து எடுத்தார். இதிலும், கதாநாயகியாக ஸ்ரீதேவியே நடிக்க, அமோல் பலேக்கர் என்பவர் கமலின் வேடத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கே ஐடியா கொடுத்த நடிகர்… முதல் படமே தோல்வி… இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
ஒரு வெற்றிப்படத்திற்கு தேவையான அனைத்தும் இருந்தும் இப்படம் ஓடவில்லை. பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இந்த படம் ஏன் தோற்றது என பாரதிராஜாவுக்கு புரியவே இல்லை. அதிர்ச்சி என்னவெனில் பாரதிராஜா எடுத்த அந்த படம் ஒரு ஹிந்தி படமே இல்லை. இந்த படத்திற்கு டாக்டர் சங்கர் சேஷ் என்பவர் என்பவர் வசனங்களை எழுதியிருந்தார்.
அவர் எழுதியது ஹிந்தி அல்ல பேஜ்புரி. பீகார் மற்றும் நேபாள எல்லைகளில் பேசப்படும் மொழி அது. வசனங்கள் அனைத்தும் பேஜ்பூரியில் இருந்ததால் அது ஒரு பேஜ்பூரி மொழி படமாகவே மாறிப்போனது. இந்த படத்தின் தோல்விக்கே வசனகர்த்தாதான் காரணம் என்பதே பாரதிராஜாவுக்கு பல வருடம் கழித்துதான் தெரிய வந்ததாம்.
இது எப்படி இருக்கு!…
இதையும் படிங்க: வாலி சொன்ன ஒரு வார்த்தை!.. பாரதிராஜா வாழ்க்கையில் அப்படியே பலித்த அந்த சம்பவம்!..