தகவலுக்கு நன்றி மாறன்!. புளூசட்ட மாறனை பங்கம் செய்த பிரபல இயக்குனர்….

Published on: August 20, 2024
---Advertisement---

Bluesatta maran: தமிழ் டாக்கிஸ் எனும் யுடியூப் சேனலில் தமிழ் மற்றும் மற்ற மொழிகளிலும் வெளியாகும் திரைப்படங்களை விமர்சித்து வருபவர் புளூசட்ட மாறன். லாஜிக் இல்லாத மசாலா திரைப்படங்களையும், அப்படத்தில் நடிக்கும் நடிகரையும், அப்பட இயக்குனரையும் செமையாக நக்கலடிப்பார்.

ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என ஒருவரையும் விடமாட்டார். இதனாலேயே அந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு இவரை பிடிக்காது. சமூகவலைத்தளங்களில் மாறனை அவர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள். ஆனால், யாருக்காகவும் மாறன் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி கதையை நிராகரித்த பிரபல நடிகர்… பதிலா வந்த ஹிட் படம்தான் மாஸ்

நான் விமர்சனம் செய்வேன். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் எனக்கு படத்தை விமர்சிக்க உரிமை இருக்கிறது என்பதுதான் மாறனின் வாதம். இவரின் விமர்சங்களில் கடுப்பாகி சில இயக்குனர்கள் இவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த கதையெல்லாம் நடந்தது.

ஒருவர் விடாமல் ஒரண்டை இழுப்பது மாறனின் பழக்கம். ஒருபக்கம் வீடியோ போடுவது எனில் மறுபக்கம் டிவிட்டரில் சினிமா தொடர்பான செய்திகளை பதிவிடுவதோடு அதிலும் நக்கலடிப்பது என அட்ராசிட்டி செய்பவர்தான் மாறன். தனுஷ், சிவகார்த்திகேயன் என ஒருவரையும் விடமாட்டார்.

குறிப்பாக ரஜினியை ‘தலீவர்’ என குறிப்பிட்டு தொடர்ந்து நக்கலடிப்பார். சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் சேரனையும் வம்பிக்கிழுத்தார். சமீபத்தில் விஜய் ஆண்டனியையும் அவர் விடவில்லை. இந்நிலையில், டிவிட்டர் பக்கத்தில் ‘பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை சேரன் இயக்கலாம் என தகவல். பிரபல நடிகருடன் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது’ என டிவிட் செய்திருந்தார் மாறன்.

இதற்கு ‘தகவலுக்கு நன்றி மாறன்’ என பதில் சொல்லி இருக்கிறார் சேரன். எனவே, சேரனுக்கே தெரியாத விஷயத்தை மாறன் சொல்லி இருக்கிறார். சேரன் நக்கலடித்து பதில் சொல்லியிருக்கிறார் என மாறனை எல்லோரும் கலாய்த்து வருகின்றனர்..

இதையும் படிங்க: இந்த முறை விடவே கூடாது!.. நடிகர்களுக்கு ஆப்புதான்!.. தயாரிப்பாளர் சங்கம் கறார்!….

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.