வளர்த்துவிட்டவரையே வெட்ட கூடாது… விஷால் மீது ஆவேசமாகும் தருண் கோபி… இவ்ளோ நடந்துருக்கா!...

Vishal: தமிழ் சினிமாவில் செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாய் அறிமுகமானவர் நடிகர் விஷால். இவர் பின் தாமிரபரணி, சண்டகோழி போன்ற திரைப்படத்தின் மூலம் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட நடிகராகவும் மாறினார். பின் இவர் நடித்த சத்யம், வெடி போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிதளவில் கை கொடுக்கவில்லை.
நடிகராக இருந்த இவர் பின் தனக்கென தனி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தார். தான் தயாரித்த திரைப்படங்களில் தானே நடிகராகவும் நடித்திருந்தார். பாண்டிய நாடு, துப்பறிவாளன் போன்ற பல திரைப்படங்களை தானே நடித்தும் தயாரித்தும் வந்தார்.
இதையும் வாசிங்க:இப்படியே மாத்தி மாத்தி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி? யார் பெருசுனு அடிச்சு காட்டுறது..!
ஆனால் இப்படி பல தோல்வி திரைப்படங்களை கொடுத்த விஷாலுக்கு சில மாதங்களுக்கு முன் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியை பெற்று தந்தது. பொதுவாக விஷால் என்றாலே சர்ச்சை பேச்சுக்கு பெயர் போனவர். இவர் பேசிய பல கருத்துகள் சர்ச்சையையே கிளப்பும்.
சமீபத்தில் கூட சிறிய பட்ஜெட் படங்களை இயக்குபவர்கள் அப்பணத்தை சொத்துகளை வாங்குவதில் செலவிட சொன்ன பேச்சு பல இயக்குனர்களின் எதிர்ப்பை சம்பாதித்தது. அதைப்போல் இவருக்கும் இவரின் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தின் இயக்குனருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அதை பற்றி அப்படத்தின் இயக்குனரான தருண் கோபி சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.
இதையும் வாசிங்க:நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!. லால் சலாமில் பஞ்சாயத்து கிளப்பும் விஷ்ணு விஷால்.
அதன்படி திமிரு படத்தின் படபிடிப்பை பல இடங்களில் எடுக்க வேண்டியிருந்ததால் அதனை விஷால் தவறாக தனக்கு படத்தை இயக்கவே தெரியாது என நினைத்து கொண்டார் என கூறியுள்ளார். மேலும் அப்படத்தில் வில்லியாக வந்த ஸ்ரேயா ரெட்டி நடித்த ஈஸ்வரி கதாபாத்திரத்தின் காட்சிகளை எடுக்கும் போது அங்கிருந்த மக்கள் கை தட்டியதாகவும் மேலும் அந்த காட்சியில் ஷ்ரேயா ரெட்டிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்ததாலும் அது விஷாலுக்கு ஏதோ சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் அக்காட்சிகளை எடுத்து முடுத்தபின் விஷால் தானே படத்தின் எடிட்டிங் பொறுப்பை பார்த்து கொள்கிறேன் என இயக்குனரிடம் கூறியுள்ளார். அதற்கு இயக்குனரும் எடிட்டிங் கூட தெரியாமலா இங்கு வந்துள்ளோம் என சற்று கண்டிப்புடன் பேசினாராம். இதனால்தான் இவர்களுக்குள் சிறிய மனக்கசப்பு ஏற்பட்டதாம். ஆனால் தன்னை வளர்த்து விட்டவரை விஷால் என்றைக்கும் மறக்க கூடாது என தனது ஆதங்கத்தை அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதே ஸ்ரேயா ரெட்டிதான் விஷாலின் அண்ணனை பின்னாளில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க:விஷால் கொளுத்தி போட்ட வெடி… ஆனா அதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா!..