ms. vishwanathan
ms. vishwanathan

டிஆர்.பந்துலுவின் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் பாடல்கள் காலத்தைக் கடந்து இன்று வரை கொண்டாடப்படும் பாடல்களாக உள்ளன. அதற்கு முக்கியமான காரணம் என்னன்னு தெரியுமா? இதுகுறித்து எம்எஸ்.விஸ்வநாதன் ஒரு கட்டுரையில் இப்படி தெரிவித்துள்ளார்.

அந்தப் படத்தின் பாடல் பதிவுக்கு முன்னால வானமும் பூமியும் தான் எல்லை. புகுந்து விளையாடுங்க. எங்கே வேணாலும் போய் கம்போஸ் பண்ணுங்க. ஆனால் பாடல்கள் அத்தனையும் மிகச்சிறப்பாக அமைய வேண்டும் என்று எம்எஸ்வி.யிடம் சொன்னாராம் பிஆர்.பந்துலு. அதைத் தொடர்ந்து கண்ணதாசனும், எம்எஸ்வி.யும் பெங்களூருவுக்கு போய் ஒரு வாரம் தங்கி பாடல்கள் அத்தனையையும் எழுதி முடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது. ஆனால் மூன்றே நாள்களில் அத்தனைப் பாடல்களையும் மிக அற்புதமாக எழுதி முடித்து விட்டார் கண்ணதாசன்.

கர்ணன் படத்தில் ”ஆயிரம் கரங்கள் நீட்டி…” என்று தொடங்குகிற பாடல் மிக அற்புதமானது. அதே மாதிரி பொருள் நிறைந்த பாடலாகவும் அது அமைந்துள்ளது. அந்தப் பாட்டைப் பொருத்தவரை தன் மனதுக்குத் தோன்றியபடி எல்லாம் கவிஞர் கண்ணதாசன் எழுதி விடவில்லை. அந்தப் பாடலை எழுதுவதற்கு முன்னால் பல சமஸ்கிருத பண்டிதர்களை அழைத்து சூரிய நமஸ்காரம் பற்றி முழுமையாகக் கேட்டறிந்து அதற்குப் பின்னால் தான் அந்தப் பாடலை எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.

அதனால்தான் அந்தப் பாடல் அத்தனை சிறப்பாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் பதிவு செய்துள்ளார்.