ஒரு நாளைக்கு ரெண்டு படம்னாலும் அடைக்கமுடியாதே! கௌதம் மேனனுக்கு இவ்வளவு கோடி கடனா?

Published on: December 24, 2023
gautham
---Advertisement---

Gautham Menon: தமிழ் சினிமாவில் இன்று ஒரு தவிர்க்க முடியாத  நடிகராக மாறியிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். இவரின் இயக்கத்தில் பல நல்ல படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் எல்லாம் இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள்தான்.

கௌதம் மேனனின் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களே. இன்று டாப் ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களுக்கு அவர்களின் கெரியரில் திருப்பு முனையாக இருக்கும் படங்களில் கண்டிப்பாக கௌதம் மேனனின் படமும் இடம் பெற்றிருக்கும்.

இதையும் படிங்க: இந்த வருஷம் வெளியான 254 படத்துல இத்தனை படம் தான் தேறுச்சு!.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!..

இப்படி இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார். அப்படி இருக்கும் போது  திடிரென நடிகர் அவதாரம் எடுத்து ஷாக் கொடுத்தார். இருந்தாலும் நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார் கௌதம் மேனன்.

சமீபத்தில் கூட லியோ படத்தில் போலீஸாக வந்து கெத்து காட்டினார். இந்த நிலையில் கௌதம் மேனன் நடிக்க வந்ததற்கு காரணமே அவருக்கு இருக்கும் கடன் தான் என சொல்லப்பட்டது. அதை அடைக்கவே நடித்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து கடனை அடைக்கலாம் என்று நினைத்ததாக செய்திகள் வந்தன.

இதையும் படிங்க: இப்பவே அடுத்த பலியாடு விஜய் தான்னு கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க!.. எல்லாத்துக்கும் காரணம் அதுதான்!..

மேலும் அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தின் மீதும் ஏகப்பட்ட கடன்கள் இருப்பதாகவும் அதை அடைக்கவும் கௌதம் மேனன் படங்களில் நடித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் உண்மையிலேயே கௌதம் மேனனுக்கு 60 கோடி கடன் என்கிறார்களே அது உண்மையா? என ரசிகர் ஒருவர் கேட்க,

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் 60 கோடி கடன் என்பது கௌதம் மேனனின் தனிப்பட்ட கடன் இல்லை. சினிமாப் படங்களுக்காக அவர் வாங்கிய கடன். அது வட்டி மேல் வட்டி , குட்டி போட்டு இப்போது நிற்கிறது. அந்தக் கடனை அடைக்க அரும்பாடு பட்டு வருகிறார் கௌதம் மேனன் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: சலார் படம் சொதப்ப குறிப்பா இந்த 4 பேர் தான் காரணம்!.. அதுல ஹைலைட்டே அந்த நடிகர் தான்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.