கதை பிடித்திருந்தும் நடிக்காத ரஜினி!. கேப்பில் புகுந்த வேற இயக்குனர்.. கவுதம் மேனனோட பேட் லக்!..
Rajiinkanth: புதுமுக இயக்குனர் என்றாலும் சரி, பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர்கள் என்றாலும் சரி தமிழ் சினிமாவில் உள்ள எல்லா இயக்குனர்களுக்கும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஏனெனில், ரஜினி நடிக்கும் படம் எனில் அதன் ரீச் என்பது வேறலெவலில் இருக்கும்.
ரஜினி படத்தை இயக்கும் இயக்குனரும் ஸ்டார் அந்தஸ்த்தை பெற்றுவிடுவார். அதோடு, அவரின் சம்பளமும் தாறுமாறாக அதிகரித்துவிடும். ஒருபக்கம், எல்லோரும் ரஜினி படங்களை பார்த்து ரசித்தவர்கள் என்பதால் அடிப்படையில் எல்லோருக்குள்ளும் ஒரு ரஜினி ரசிகன் இருப்பான். அந்த தாக்கத்தை ஏற்படுத்தியதுதான் ரஜினியின் வெற்றி.
இதையும் படிங்க: பொன்னம்பலம் அடித்ததில் மருத்துவமனையில் அட்மிட் ஆன கேப்டன்!.. இவ்வளவு நடந்திருக்கா?!…
முன்பெல்லாம் பாலச்சந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், கே.எஸ். ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா போன்ற அனுபவமுள்ள பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே ரஜினி நடித்து வந்தார். கடந்த 15 வருடங்களாக ரஜினி தன்னை மாற்றிக்கொண்டு விட்டார். இப்போதெல்லாம், ஒரு படம் ஹிட் கொடுத்தால் கூட அவரை அழைத்து கதை கேட்கிறார்.
அப்படித்தான் தேசிங்கு பெரியசாமி, டான் சக்ரவர்த்தி ஆகியோரிடம் கதை கேட்டார். ஆனால், அது டேக் ஆப் ஆகவில்லை. சாமி படம் சூப்பர் ஹிட் அடித்தபோது ஹரியை அழைத்து கதை கேட்டார். அதுவும் நடக்கவில்லை. ஸ்டைலீஸ் இயக்குனர் கவுதம் மேனனினிடம் கூட ரஜினி கேட்டார். ஆனால், நடக்கவில்லை.
இதையும் படிங்க: அடுத்து பண்ண போறத பாருங்கடா!.. விஜய் இல்லனா வேற நடிகர்!.. கொக்கரிக்கும் அட்லீ!..
அதேநேரம், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் இயக்கத்தில் நடித்து ஆச்சர்யம் கொடுத்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய கௌதம் மேனன் ‘துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம்தான் சொன்னேன். ஆனால், ஸ்பை திரில்லர் கதை வொர்க் ஆகுமா என அவருக்கு சந்தேகம் இருந்தது.
ஏனெனில் தமிழில் அப்படி படங்கள் வந்தது இல்லை. அதனால் அவர் நடிக்கவில்லை. அதன்பின் அதே கதையை ரஜினியிடம் அவரின் வயதுக்கு ஏற்றது போல சில மாற்றங்களை செய்து சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. ஆனால், அது டேக் ஆப் ஆகவில்லை. அப்போது ரஞ்சித் சொன்ன கதை பிடித்ததால் கபாலி படத்தில் நடித்தார்’ என கௌதம் மேனன் கூறினார்.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க போறான்னு ஒப்பாரி வச்ச ரஜினி… நடிகவேள் பட்டத்தை ஏன் தூக்கி கொடுக்கிறாரு?