கமல் அப்படி செய்வாருன்னு யாருமே எதிர்பார்க்கல!... கௌதம் மேனன் என்ன சொல்றார் பாருங்க!..
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே அது யதார்த்தம் கலந்த அதிரடி படங்களாகத் தான் இருக்கும். வேட்டையாடு விளையாடு, காக்க காக்க படங்களைச் சொல்லலாம். அதையும் தாண்டி என்றால் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற காதல் ரசம் சொட்டும் படத்தையும் இயக்கினார்.
அதே போல தான் வாரணம் ஆயிரம் படமும் வித்தியாசமாக வந்தது. அந்த வகையில் எனை நோக்கி பாயும் தோட்டா படமும், வெந்து தணிந்தது காடு படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதுகுறித்து கௌதம் மேனன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
எனக்கு ஹாரர் படங்கள் பார்ப்பது பிடிக்காது. சந்திரமுகி 2 படத்தோட இந்தி ரீமேக் பண்ணுற வாய்ப்பு வந்துச்சு. ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்லை. காமெடி படங்கள் பண்றது ரொம்ப பிடிக்கும். மின்னலே படத்தில் இயல்பான காமெடி வரும். முழுநீள காமெடி படங்கள் இயக்குற வாய்ப்பு எனக்கு இன்னும் வரல.
வேட்டையாடு விளையாடு படத்தில் ஓபனிங் சீனில் கமல் வில்லனிடம் என் கண்ணு வேணும்னு கேட்டீயாமே... அப்படின்னு சொல்லிட்டு கத்தியைக் கையில் கொடுத்து எடுறான்னு சொல்வார். அப்போது கண்ணை கைவிரல்களால் விரித்துக் காட்டுவார். இது ஸ்கிரிப்ட்ல இல்ல. கத்தியைக் கொடுத்து எடுறான்னு சொல்றது வரைக்கும் ஸ்கிரிப்ட்ல இருந்துச்சு.
ஆனா கண்ணை விரிச்சிக் காட்டுவாருங்கறது தெரியாது. அப்படி பண்ணதும் நான் ரவியைக் கூப்பிட்டு அந்த இடத்துல கொஞ்சம் ஷூம் பண்ணி எடுத்தோம். எல்லாரும் ரொம்ப ரசிச்சோம். தியேட்டர்லயும் அந்த எபெக்ட் இருந்துச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... இந்த பாட்டுல நான் நடிக்க மாட்டேன்!. அடம்பிடித்த எம்.ஜி.ஆர்.. பின்னாடி அவர் படம்னாலே அதுதான்!..
கௌதம் மேனன் இயக்கத்தில் 2006ல் கமல் நடிப்பில் உருவான படம் வேட்டையாடு விளையாடு. இந்தப் படத்தில் டிஜிபி ராகவனாக கமல் நடித்து அசத்தினார். படம் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பட்டையைக் கிளப்பியது. ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். டேனியல் பாலாஜியும், சலீம் பைக்கும் வில்லன்களாகத் தோன்றி மிரட்டியிருப்பார்கள்.