விஜயின் கடைசி படம் அரசியலைப் பேசுகிறதா? இயக்குனர் சொன்ன புதுத் தகவல்
விஜயின் கடைசி படம் அரசியலைச் சொல்லும் விதத்தில் இருக்குமா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதுபற்றிய கருத்தை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இதுபற்றி வேறு என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
இது பக்கா கமர்ஷியலான படம். அரசியலுக்கானது அல்ல. 200 பர்சன்ட் விஜய்க்கான படம். பைட், பாட்டு எல்லாம் மாஸா இருக்கும். அதனால தான் படத்தைப் படமா பாருங்க. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லன்னு கோட் பட புரோமோஷன்ல எல்லாம் கட்சிக் கொடி, பேரைப் பயன்படுத்தாதீங்கன்னு விஜய் கேட்டுக் கொண்டார்.
அதனால் தான் ஆடியோ லாஞ்ச் கூட வைக்கவில்லை. செப்டம்பர் 25ம் தேதி விஜய் அரசியல் மாநாடு நடத்தப் போகிறாராம். அதனால் இந்தப் படத்திற்கு ஆடியோ லாஞ்ச் வேணாம்னும் சொல்லி விட்டாராம்.
கமலுக்குத் தயாராக வைத்த கதை தான் தளபதி 69ன்னு சொல்றாங்க. அதெல்லாம் கிடையாது. இந்தப் படத்தை முடிச்சிட்டுக் கூட கமலிடம் போய் சொல்லி அந்தக் கதையை இயக்குவேன்னு சொன்னாராம் எச்.வினோத்.
விஷ்ணு படத் தயாரிப்பாளர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து இப்படி சொல்லி இருக்கிறார். இது 1995ல் ரிலீஸானது. எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கினார். அப்போது கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருந்தார். விஷ்ணு படத்திற்குப் பிறகு தான் அவர் கதை, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதுக்கு முன்னாடி எல்லாம் நிறைய ட்ரோல் பண்ணினாங்க. இவருக்கு நாங்க 3 லட்ச ரூபாய்னு சம்பளம் பேசினோம். 1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தோம்.
அப்போ நாங்க விஜய் ஒரு நல்ல நடிகரா வருவாருன்னு நினைச்சோம். ஆனா இன்னைக்கு ஒரு பெரிய இடத்துக்கு அதாவது ரஜினிக்கு இணையா சம்பளம் வாங்கக்கூடிய ஒருவரா வருவாருன்னு நாங்க சத்தியமா நினைக்கவே இல்லன்னு சொன்னார். இது தான் சினிமா. இவர் இப்போது இந்த அளவு பெரிய ஆளாக வளர்ந்து இருப்பது எங்களுக்கும் பெருமை தான்.
ஏன்னா அவரது 69 படங்களில் ஒரு படமாக எங்களது படமும் இருக்கிறது என்றாராம் அந்தத் தயாரிப்பாளர். இந்த வளர்ச்சியையும், வெற்றியையும் அடுத்த களத்திற்கு எப்படி விஜய் பயன்படுத்தப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.