
Cinema News
இதுவரை நான் ஏன் அதனை அதிகமாக செய்தது இல்லை தெரியுமா.?! போட்டுடைத்த இயக்குனர் ஹரி.!
தமிழ் திரையுலகில் ஒரு பழக்கம் உண்டு. அது என்னவென்றால் சினிமாவை இரண்டு விதமாக பிரிப்பார்கள் ஒன்று விருது வாங்கும் நல்ல சினிமா. இன்னொன்று மக்களுக்கு தங்கள் கவலைகளை மறந்து பொழுதுபோக்க கமர்சியல் சினிமா என கூறுவதுண்டு.

Director Hari @ Poojai Movie Shooting Spot Stills
எப்போதும் மாலை மரியாதை எல்லாம் விருது வாங்கும் படங்களை எடுக்கும் இயக்குனர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும். உண்மையில், மக்கள் எதனை ரசிப்பார்கள். எதனை கொண்டாடுவார்கள் வரும் இரண்டரை மணி நேரம் அவர்கள் கவலைகள் மறந்து கொண்டாடி தீர்த்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என படம் இயக்கும் கமர்சியல் இயக்குநர்களால் தான் இன்றைய தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது என்றே கூறலாம்.
இதையும் படியுங்களேன் – பிக்பாஸில் கமலுக்கு பதில் சிம்பு… இதுக்கு அவர் செட் ஆவாரா?
அப்படி கமர்சியல் பார்முலாக்களை வைத்து தொடர்ந்து ஹிட் கொடுக்கிறாரோ இல்லையோ இதுவரை தயாரிப்பாளரை நஷ்டமடையாமல் பார்த்துக்கொண்டார் என்றால் அது இயக்குனர் ஹரி தான். இவர் ஒரு பக்கா கமர்சியல் இயக்குனர் என்பதை அடிக்கடி வெளிப்படையகவே கூறிவிடுவார்.
இவர் பேட்டியை நம்மில் அதிகம் பேர் பார்த்தது கிடையாது. காரணம் இவரிடம் கேட்டால், நமக்கு எதுக்கு சார் பேட்டி எல்லாம். எனக்கு தெரிந்த காசு பார்க்கும் கமர்சியல் சினிமாக்களை இயக்கி வருகிறேன். அதனால், அதெல்லாம் வேண்டாம் சார் என மறுத்து விடுவார்.
ஆறு, சாமி, சிங்கம், பூஜை என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி தற்போது யானை பலத்துடன் களமிறங்குகிறார். இந்த பட ஷூட்டிங் முடிந்து தற்போது ரிலீசுக்கான வேலைகள் நடைபெறுகிறது. விரைவில் பட ரிலீஸ் தேதி அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.