அந்த நடிகை வேண்டாம் என ரிஜெக்ட் செய்தேன்... ஆனால் அவர் அழகில் மயங்கி விட்டேன்.... ஓப்பனாக பேசிய இயக்குனர்....!

தமிழ் சினிமாவில் கோவில், சாமி, சிங்கம், வேங்கை என ஆக்ஷன் படங்களிலேயே வெரைட்டி காட்டி மிரட்டியவர் தான் இயக்குனர் ஹரி. பெரும்பாலும் கிராம கதைகளையே கையில் எடுத்து வெற்றிக் கண்ட ஹரி ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் இயக்கியுள்ள படம் தான் யானை.
முதல் முறையாக தனது மச்சானும் நடிகருமான அருண் விஜய்யுடன் ஹரி கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்கள் தவிர ராதிகா, யோகிபாபு சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

priya bhavani shankar
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஹரி முதலில் நடிகை பிரியா பவானி சங்கரை வேண்டாம் என கூறி ரிஜெக்ட் செய்ததாக கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, "யானை படத்திற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரியா பவனி சங்கர் பெயரும் அடிபட்டது.
அந்த சமயத்தில் தான் பிரியா பவனி சங்கர் அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா படத்தில் நடித்திருந்தார். எனவே மறுபடியும் அவர் வேண்டாம் என அவரை ரிஜக்ட் செய்தேன். அதன் பின்னர் ஒரு திருமணவிழாவில் பிரியாவை சந்திக்க நேர்ந்தது.
அந்த நிகழ்ச்சி முழுவதும் பிரியா பவானி சங்கர் மீதிருந்து என்னுடைய கண் நகரவே இல்லை. அப்போது தான் முடிவு செய்தேன் பிரியா தான் இந்த படத்தின் நாயகி என்று" என மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.