இளையராஜாவுக்கு இது கஷ்டகாலம்தான்! உருவாகிறது யுவனின் பயோபிக்.. யார் இயக்குனர் தெரியுமா?

by Rohini |
yuvan
X

yuvan

Yuvan Shankar Raja: தமிழ் சினிமாவில் இசைத்துறையில் ஒரு மாபெரும் கோட்டையை கட்டி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவருடைய இசை வாரிசான யுவன் சங்கர் ராஜாவும் இப்போது பல படங்களில் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட கோட் திரைப்படத்திற்காக இசையமைத்திருக்கிறார். அஜித், விஜய் போன்ற மிகப்பெரிய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கும் யுவன் சங்கர் ராஜா வெளிநாடுகளில் சில பல கச்சேரிகளையும் நடத்தி இருக்கிறார்.

இளையராஜாவின் வாரிசு என்றால் சும்மாவா என்பதை தன் படங்களின் மூலம் நிரூபித்து வருகிறார். கிட்டத்தட்ட 25 வருடங்களில் 170 படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. தன்னுடைய 16 வது வயதிலேயே அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கினார் யுவன் சங்கர் ராஜா.

இதையும் படிங்க: நக்மாவால தான் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படமே உருவாச்சு! ஒரிஜினல் ஸ்கிரிப்ட் கேட்டா ஆச்சரியப்படுவீங்க

துள்ளுவதோ இளமை படம் தான் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது. இந்த படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் சூப்பர் ஹிட். ஏகப்பட்ட விருதுகளை அள்ளி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இவருடைய சொந்த வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் ஒரு விமானியாக ஆக வேண்டும் என்று தான் விரும்பினாராம்.

ஏனெனில் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புவதுதான் இவருடைய ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் தன்னைச் சுற்றி இசையையே கேட்டு வளர்ந்தவருக்கு கடைசியில் ஒரு இசை கலைஞராகத்தான் ஆக முடிந்தது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் பயோபிக் கூடிய சீக்கிரம் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: ‘பிராப்தம்’ இல்லாததால் கதிகலங்கி நின்ற சாவித்திரி… ஸ்ரீதரிடம் சிம்பாலிக்காக என்ன சொன்னார் தெரியுமா?

ஏற்கனவே இளையராஜாவின் பயோபிக்கை அருண் மாதேஸ்வரன் இயக்க அதில் தனுஷ் நடிக்க இருக்கிறார். அதேபோல யுவன் சங்கர் ராஜாவின் பயோ பிக்கையும் எடுக்க ஒரு இயக்குனர் ஆசைப்படுவதாக செய்திகள் வெளி வந்திருக்கின்றன. அவர் வேறு யாருமில்லை. சமீபத்தில் வெளியான ஸ்டார் படத்தை இயக்கிய இளன்.

ilan

ilan

அவர்தான் யுவன் சங்கர் ராஜாவின் வாழ்க்கை படமாக எடுக்கும் பட்சத்தில் அதை நான்தான் இயக்குவேன் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். ஏற்கனவே இளையராஜாவை பொருத்தவரைக்கும் பெயரும் புகழும் தமக்கு மட்டுமே சொந்தம் என்ற மனநிலையில் ஒரு கர்வத்துடன் இருப்பவர். இதில் தன்னுடைய பயோபிக்கும் தன் மகன் பயோபிக்கும் ஒன்றாக வருமானால் அதையும் அவர் விரும்ப மாட்டார் என்றே ரசிகர்கள் இந்த செய்தி வெளியானதில் இருந்து கமெண்ட் அடித்து வருகின்றனர்..

இதையும் படிங்க: இதுக்காகத்தான் அரசியலுக்கு வந்தீங்களா?!.. சிறுமி கேட்ட கேள்வி!. கேப்டன் சொன்ன நச் பதில்…

Next Story