அப்பவே கேஎஸ்.ரவிக்குமார் செய்த வேலை... அசந்து போன இயக்குனர்!

by sankaran v |
ks ravikumar
X

ks ravikumar

அவ்வை சண்முகி, தசாவதாரம், முத்து, படையப்பா என ரஜினி, கமலை வைத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அந்த வகையில் அவரை ஒரு வெற்றிப்பட இயக்குனர் என்றே சொல்லலாம். இதற்குப் பின்னால் இவர் ஆரம்பத்தில் எவ்வளவு கடின உழைப்பைப் போட்டுள்ளார் என்று பார்க்கலாமா...

உதவி இயக்குனராகப் பணியாற்றிய காலகட்டத்தில் இயக்குனர் ஷங்கர் எப்படி பணியாற்றினார் என்று பிரபல இயக்குனர் வெங்கட் சாய்வித் சித்ரா நிகழ்ச்சியில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ஷங்கர் இந்தளவுக்கு இப்போது உயர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு உதவி இயக்குனராக இருந்தபோது இருந்த அவரது கடினமான உழைப்புதான் காரணம் என்று தெரிவித்துள்ளார். அதே போல கருத்தை இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ஜீவா என்பவரும் தெரிவித்துள்ளார்.

director e ramdoss

director e ramdoss

இயக்குனர் இ.ராம்தாஸிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்தான் கேஎஸ்.ரவிக்குமார். ஒருமுறை சூட்டிங் நடந்தபோது அந்தக் காட்சியில் நடிக்க வேண்டிய ஒரு நடிகரின் கால்ஷீட் கிடைக்கவில்லை. அந்தக் காட்சியை எடுக்கலைன்னா சந்தை செட்டப்புக்குத்தான் போகணும். ஆனா நாளைக்குக் காலைக்குள் அந்த சந்தை செட்டப்பை எப்படி எடுக்க முடியும்? இப்பவே மணி 6 ஆகிறதே என்று ராம்தாஸ் ரவிக்குமாரிடம் வருத்தப்பட்டாராம். அப்போது 2 நிமிஷம்தான் ரவிக்குமார் யோசித்தாராம்.

அப்புறம் 'நாளைக்குக் காலைல 9 மணிக்கு சந்தை செட்டப் ரெடியா இருக்கும். நிச்சயமா நீங்க ஷூட் பண்ணலாம். அதுக்கு நான் பொறுப்பு'ன்னு சொல்லி இருக்கிறார். அன்று இரவு முழுவதும் தூங்காமல் செட்டை ரெடி பண்ணி இருக்கிறார். காலையில் வந்து பார்த்த ராம்தாஸ் 'என்னய்யா இவ்ளோ பிரமாதமா பண்ணிட்டேன்னு சொல்லி நீ இன்னும் தூங்கலையா? போய் தூங்கு'ன்னு சொன்னாராம். அதைத் தான் நானும் கேட்க வந்தேன் என்றாராம் கேஎஸ்.ரவிக்குமார்.

அந்த வகையில் உதவி இயக்குனராக இருந்தபோது ஒரு முனைப்புடன் வேலை செய்துள்ளார். அதுதான் இன்று தமிழ்சினிமாவில் அவரை முக்கியமான ஒரு இயக்குனராக மாற்றியுள்ளது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

Next Story