More
Categories: Cinema News latest news

வெற்றி போதையில் ஆட மாட்டேன்.. நல்லா எழுதப் போறேன்.. நெல்சனுக்கு நறுக்கென குட்டு வைத்த லோகேஷ்!

இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களை விட 5 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத பாகுபலி 2ம் பாகத்தின் வசூலையே முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது கமலின் விக்ரம் படம்.

அப்படியொரு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து விட்டு, சாதாரண ஆட்டோ மெக்கானிக் மாதிரியே முகத்தை எப்படித்தான் வைத்துக் கொள்கிறார் லோகேஷ் கனகாராஜ் என்கிற வித்தையை பல இளம் இயக்குநர்கள் மட்டுமின்றி அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

Advertising
Advertising

லெக்சஸ் கார் பரிசளித்த கமல்ஹாசன், 40 வகையான நான் வெஜ் விருந்து கொடுத்து விக்ரம் வெற்றி விழாவை அசத்தி விட்டார். மேலும், தனக்கு இப்படியொரு வெற்றியையும் அதிக லாபத்தையும் அள்ளிக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினருக்கு முத்தங்களையும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கமலும் அனிருத்தும் பார்க்கிறார்களே என்று கூட கவலைப்படாமல் விருந்தை ஒரு பிடிப்பிடி பிடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியே வந்த நிலையில், அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தது தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

விக்ரம் படத்தின் வெற்றியால் சந்தோஷம் தான். ஆனால், அங்கேயே தேங்கி விட விரும்பவில்லை. மக்கள் எனக்கு நிறைய ஆதரவை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது அடுத்த படம் மூலம் தான் அந்த கடனை ஈடு செய்ய முடியும்.

அதற்கான உழைப்பை போட ஆரம்பித்து விட்டேன். நன்றாக எழுதப் போகிறேன். நல்ல திரைக்கதை மட்டுமே ஒரு சிறந்த படத்தை உருவாக்கும் என்பதை மக்கள் தொடர்ந்து சொல்லி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

வெற்றி வந்து விட்டதே என அசால்ட்டா விட்டு விட்டால் ரொம்பவே கஷ்டம் ஆகிவிடும். கடினமான உழைப்பை கொடுத்து தளபதி 67 படத்துக்கான கதையை எழுத போகிறேன், விரைவில் அதுதொடர்பான அறிவிப்புகள் வரும் எனக் கூறியுள்ளார்.

இந்த பேட்டியை விஜய் ரசிகர்கள் பலரும் இயக்குநர் நெல்சனுக்கு டேக் செய்து, ட்ரோல் செய்து வருகின்றனர்.

டாக்டர் படம் 100 கோடி வசூலை தந்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன நிலையில் தான் பீஸ்ட் படத்தில் நெல்சன் கோட்டை விட்டு விட்டார் என்றும் தாளித்து கொட்டி வருகின்றனர்.

மேலும், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்காவது நல்ல திரைக்கதையையும் சுவாரஸ்யமான காட்சிகளையும் எழுதுங்கள் என்றும் தேவைப்பட்டால் அதற்கு உரிய R&D செய்து படம் பண்ணுங்க அந்த படத்தையும் சொதப்பிடாதீங்க என்றும் ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts