Connect with us
MGR, Mahendran

Cinema History

தூக்கிவிட்ட எம்ஜிஆருக்கே ஆப்பு வைத்த இயக்குனர்… இதெல்லாம் நியாயமாப்பா…?!

உதிரிப்பூக்களை இயக்கியவர் மகேந்திரன். முற்றிலும் மாறுபட்ட சூப்பர்ஹிட் திரைப்படம் இது. இந்த மகேந்திரன் எப்படி திரைத்துறைக்குள் நுழைந்தார் என்பது சுவாரசியமான விஷயம். அதைப் பற்றிப் பார்ப்போம்.

காரைக்குடி அழகப்பா பல்கலையில் மாணவராக படித்துக்கொண்டு இருந்தார் இயக்குனர் மகேந்திரன். அது 1957ம் வருடம். அப்போது அங்கு கல்லூரி சார்பாக நடந்த ஒரு விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அந்த விழாவில் மாணவர்களுக்கு பேச 3 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதுவும் மூன்றே பேருக்குத் தான் அந்த வாய்ப்பு.

முதலில் மகேந்திரன் பேசத் தொடங்கினார். யதார்த்த வாழ்வில் காதலிப்பது என்பது பல சிக்கல்கள் நிறைந்த ஒன்று. ஆனால் இவரைப் பாருங்கள். ஒரே படத்தில் கதாநாயகியுடன் நான்கைந்து டூயட். காதலர்கள் எங்காவது டூயட் பாடி பார்த்து இருக்கிறோமா? இப்படிப் பேசியதும் அரங்கத்தில் கரகோஷம் விண்ணைப்பிளந்தது.

அதுவரை கவனிக்காமல் ஆட்டோகிராப் போட்டுக் கொண்டு இருந்த எம்ஜிஆர் நம்மைப் பற்றியும் ஒரு மாணவன் பேசுகிறானே எனக் கவனிக்கத் தொடங்கினார். அவனது பேச்சையும் கைதட்டி ரசித்தார். அதுமட்டுமல்ல. அவனுக்கு 3 நிமிடம் மட்டும் வழங்கப்பட்ட அனுமதி 45 நிமிடம் வரை நீடித்தது.

Soa Ramasamy

Soa Ramasamy

தமிழ்ப்பட உலகில் வித்தியாசமான கோணத்தில் படம் எடுத்துப் பெயர் பெற்றவர் இயக்குனர் மகேந்திரன். மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்குனர் இவர். அந்த வகையில் இவ்வளவு பெரிய இயக்குனராக மாறுவதற்கு இந்த நிகழ்ச்சியே அஸ்திவாரம் போட்டது.

எம்ஜிஆரின் உதவியால் ஆரம்பத்தில் சில படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதினார் மகேந்திரன். தங்கப்பதக்கம் படத்தில் வசனமும் எழுத ஆரம்பித்தார். அப்படி இருந்தும் அவருக்கு சினிமாவில் ஒரு பிடிப்பு வரவில்லை.

நொந்து போய் ஊருக்குத் திரும்பி விட்டாராம். அதன்பிறகு நடிகர் சோ சொல்வதைக் கேட்டு துக்ளக் இதழில் பத்திரிகையாளராக பணியாற்றினார். அதில் சினிமா விமர்சனங்களை போஸ்ட் மார்ட்டம் என்ற பெயரில் எழுதினார். உலகப்பார்வையில் உள்ளூர் சினிமாக்களை விமர்சனங்களால் வறுத்தெடுத்தார்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் இவரை திரைத்துறைக்கு அழைத்து வந்ததே எம்ஜிஆர் தான். அவரது படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கும் கடும் விமர்சனம் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top