ஜானி படத்துல ரெண்டு ரஜினிக்கும் அவ்ளோ வித்தியாசம்? காரணம் அவரா? நம்பவே முடியலையே!

johny
Rajnikanth: சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான மறக்க முடியாத படம் ஜானி. ரஜினியின் கெரியரிலேயே இது ஒரு மைல் கல். 1980ல் வெளியான இந்தப் படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி, தீபா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஆனால் ஒன்றுக்கொன்று முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பாக இருக்கும். இதற்கு எல்லாம் காரணம் யாருன்னா அந்தப் பிரபலம்தான். வாங்க அவரைப் பற்றிப் பார்ப்போம்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்து பிரபலமானவர் தான் ஓவியர் ஜெயராஜ். இவர் இதுவரை 195 பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.

குமுதம், சாவி உள்பட பல பத்திரிகைகள் இதில் அடங்கும். அதே போல சினிமாவிலும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. காதலிக்க நேரமில்லை படத்துக்கு ஒரு பக்கம் முழுவதும் சூட்டிங் ஸ்பாட்டுல என்னென்ன நடக்குதுங்கறதைக் கற்பனையா போடச் சொன்னாங்க. அதை பப்ளிசிட்டிக்காக பண்ணினாங்க. அப்போ டைரக்டர் ஸ்ரீதர் நான் நினைச்சதை விட ரொம்ப நல்லாவே போட்டுருக்கேன்னு என்னைப் பாராட்டினார் என்கிறார் ஓவியர் ஜெயராஜ்.
நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி படங்களுக்கு காஸ்டியூம் டிசைனிங் பண்ணியது ஓவியர் ஜெயராஜ்தான். இரண்டு ரஜினிக்கும் வித்தியாசம் தெரியணும்னு அப்படிப் போட்டுக் கொடுத்தேன் என்கிறார். அது நல்ல பிரபலமானது. அதற்குக் காரணம் டைரக்டர் மகேந்திரன்தான். சாவி பத்திரிகையில் பணிபுரிந்த பிறகு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ற வாய்ப்பு கிடைத்தது.

இவருக்கு இடையில் வந்த புகைப்பழக்கத்தால் உடல்நலம் சரியில்லாமல் போனது. அப்போது இருதய ஆபரேஷன் நடந்தபோதும் கூட மருத்துவமனையில் இருந்தே படங்களை வரைந்து அசத்தியுள்ளார். அப்புறம் ஒரு சமயம் வலது கையில் பைக் ஸ்டார்ட் பண்ணும்போது அடிபட பெரிய கட்டுப்போட அப்பவும் மனம் தளராமல் அருமையாக மருத்துவரின் உதவியுடன் படங்களை வரைந்து அசத்தினார்.
87வயசாகியும் கூட இப்போதும் தன்னம்பிக்கை குறையாமல் படங்களை வரைந்து வருகிறார் என்பது பாராட்ட வேண்டிய விஷயம்தான். இப்போ படம் போட்டாலும் எனக்கே அது நல்லாருக்கு. அதனாலதான் படங்களை வரைந்து வருகிறேன் என்கிறார் உற்சாகம் குறையாமல் ஜெயராஜ். இது மட்டும் அல்லாமல் வீட்டில் அலங்கரிக்கும் விதமாக பல பொருள்களையும் செய்து வருகிறார்.