முதல்ல நல்ல மனுஷனா இருங்க!. டைரக்டர்லாம் அப்புறம்!.. மணிரத்தினத்தை திட்டும் தயாரிப்பாளர்..

by amutha raja |   ( Updated:2023-11-15 01:48:56  )
Mani Ratnam
X

Director Manirathnam: மணிரத்னம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானார். பின் மெளன ராகம், நாயகன் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கினார்.

இவரின் படங்கள் பொதுவாக வித்தியாசமான கதைகளத்தில் இருக்கும். இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இவர் கமல், மாதவன் போன்ற நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரின் பெரும்பாலான படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாகவே அமைந்தன.

இதையும் வாசிங்க:பாராட்டுனது போதும்…. பேசாம இருங்க… டெல்லிகணேஷைக் கடிந்து கொண்ட கமல்..!

ஆனால் இவர் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றிப்படமாக அமையவில்லை. தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தாராக இருந்தவர் மாணிக்கம் நாராயணன். சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

kamal2

manickam narayanan

இவர் மணிரத்னம் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இவர் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் விநியோகஸ்தரராக இருந்தாராம். மேலும் இப்படத்தினால் இவர் மிகுந்த அளவு நஷ்டத்தை சந்தித்ததாகவும் அதனால் மணிரத்தினத்துக்கும் இவருக்கும் இடையே அந்த காலத்தில் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க:விஜயகாந்தை பார்த்து அல்லு விட்ருச்சி!.. படப்பிடிப்பில் அலறிய காமெடி நடிகர்….

ஆனால் தற்போது இவர் அனைத்தையும் மறந்துவிட்டு தானே போய் மணிரத்னத்திடம் ஒன்று கேட்டாராம். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் கேரள உரிமையை தனக்கு தருமாறு கேட்டாராம். ஆனால் மணிரத்னம் பழைய பகையை மனதில் வைத்து கொண்டு தர முடியாது என கூறிவிட்டாராம்.

சுஹாசினியும் நீங்கள் இப்போது இப்படி கேட்டுவிட்டு பின்னால் பிரச்சினை செய்வீர்கள் என கூறிவிட்டாராம். இதனால் மணிரத்னம் மீது கடுப்பான இவர் மணிரத்னத்தால் நிறையபேரின் வாழ்க்கை கெட்டுள்ளது எனவும் முதலில் அவர் மற்றவர்களை மனிதனாக மதிக்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் வாசிங்க:சிவகார்த்திகேயனுக்கு வந்த அடுத்த சோதனை… ஒரு வேளை தனுஷோட வேலையா இருக்குமோ?…

Next Story