சிவகார்த்திகேயனுக்கு வந்த அடுத்த சோதனை… ஒரு வேளை தனுஷோட வேலையா இருக்குமோ?...
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தனது சொந்த முயற்சியினால் சினிமாவில் நுழைந்தார். இவர் மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின் எதிர்நீச்சல், நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு பிடித்த ஒரு நடிகராக மாறினார். இதன்பின் இவர் நடித்த சீமராஜா, பிரின்ஸ் போன்ற பல திரைப்படங்கள் மூலம் இவர் தோல்வியையே தழுவினார். ஆனால் சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் இவருக்கு திரும்பவும் வெற்றியை பெற்று கொடுத்தது.
இதையும் வாசிங்க:நீங்க தியேட்டர் சீட் மட்டும்தான் உடைப்பீங்க!. ஆனா நாங்க!.. விஜய் ஃபேன்ஸை வம்பிழுக்கும் மாறன்…
ஆனால் இவரின் வளர்ச்சியில் கண்ணு விழுந்தது போல் திடீரென இவரின் மீது விழுந்த பழி இவரின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் புரட்டி போட்டது என்றுதான் கூற வேண்டும். சமீபத்தில் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் சிவகார்த்திகேயன் மீது வைத்த குற்றச்சாட்டு மிகவும் வைரலாக பரவியது. ஆனால் இந்த விஷயத்தில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.
இது குறித்து சிவகார்த்திகேயன் தரப்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த செய்தி ஓரளவுக்கு அமைதியான நிலையில் தற்போது இவருக்கென அடுத்த பிரச்சினையும் வரிசையில் நிற்கிறது. இவர் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் திரைப்படம்தான் அயலான். இப்படம் மிகவும் வித்தியாசமான கதைகளத்தில் தயாராகியுள்ளது.
இதையும் வாசிங்க:சிவாஜி படத்தால் பிரிந்த ஜெமினி கணேசன்- சாவித்ரி… காதல் மன்னன் இப்படிப்பட்டவரா?…
ஆனால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காத சிலர் தற்போது இவரது தயாரித்த திரைப்படங்கள் மற்றும் இவரே வெளியிட்ட திரைப்படங்கள் மூலம் இவர் சந்தித்த கடன்களை உடனே தருமாறு ஒரு சிக்கலை கிளப்பியுள்ளனர். இந்த சித்து வேலை தனுஷின் தூண்டுதலால் நடக்குமோ எனவும் நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இந்த பிரச்சினையை உண்டுபண்ணவே தனுஷ் தான் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாகவும் கருத்துகள் உலாவின. ஏனெனில் தனுஷ்க்கு சிவகார்த்திகேயனும் ஒரு போட்டியாளராக இருக்கிறார். இவை அனைத்தையும் தாண்டி சிவகார்த்திகேயன் தனது படத்தினை எவ்வாறு வெற்றியடைய செய்ய போகிறார் என்பது தெரியவில்லை.
இதையும் வாசிங்க:மோசமா கதை சொல்றவன் முதலிடத்தில் இருக்கான்!. விஜய் – லோகேஷை சொன்னாரா கோபி நாயனார்!?.