நீங்க தியேட்டர் சீட் மட்டும்தான் உடைப்பீங்க!. ஆனா நாங்க!.. விஜய் ஃபேன்ஸை வம்பிழுக்கும் மாறன்...

Bluesatta maran: தமிழ் டாக்கிஸ் எனும் யுடியூப் சேனலில் புது படங்களை விமர்சனம் என்கிற பெயரில் வச்சி செய்து வருபவர் புளூசட்டமாறன். இவரின் பார்வையில் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமே நல்ல சினிமா. மற்றபடி வழக்கமான காதல், ஆக்‌ஷன், பில்டப் காட்சிகள், லாஜிக் மீறல்கள், அதிகப்படியான ஹீரோயிசம் காட்டும் காட்சிகள் என எல்லாவற்ரையும் பயங்கரமாக நக்கலடிப்பார்.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் படம் என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல. எதாவது பாயிண்ட் கிடைத்தால் அதை வச்சி செமயாக கலாய்த்து விடுவார். இவருக்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ்களும் இருக்கிறார்கள். விஜய், அஜித் படங்கள் வெளியாகும்போது புளூசட்ட மாறன் என்ன ரிவ்யூ கொடுப்பாரோ என அவரின் ரசிகர்களே கொஞ்சம் பயப்படுவார்கள்.

இதையும் படிங்க: இதனால் தான் கலாபவன் மணி இறந்தார்.. 6 வருடத்துக்கு பின்னர் வெளியான ஷாக் தகவல்..!

மாறன் மீது சில இயக்குனர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவங்களும் நடந்தது. புதிய படங்களை விமர்சனம் செய்வது மட்டுமில்லாமல் பெரிய நடிகர்கள் மற்றும் அவர்களின் ரசிகர்களின் செயல்பாடுகளையும் நக்கலடித்து டிவிட்டரில் பதிவுகள் போடுவது இவரின் வழக்கம். இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களின் கோபத்திற்கும் அவர் ஆளாவதுண்டு.

ஜெயிலர் படம் வெளியான போது ரஜினி ரசிகர்களையும், லியோ படம் வெளியானபோது விஜய் ரசிகர்களையும் விடாமல் வம்பிழுத்தார். குறிப்பாக லியோ படத்தின் டிரெய்லர் வீடியோ ரோகிணி தியேட்டரில் ஒளிபரப்பப்பட்ட போது விஜய் ரசிகர்கள் இருக்கைகளை உடைத்து சேதம் செய்ததை கடுமையாகவும், நக்கலாகவும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: அதுக்கு முதல்ல நீ ஜெயிக்கணும் பிகிலு!. விஜயை பங்கமாக கலாய்த்த புளூசட்ட மாறன்…

இந்நிலையில், சமீபத்தில் சல்மான்கானின் டைகர் 3 படம் வெளியானது. அப்போது மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்கள் படம் ஓடும்போது பட்டாசை கொளுத்திபோட்டனர். அப்போது படம் பார்த்த ரசிகர்கள் நாலா பக்கமும் தெறித்து ஓடினர். இதற்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

twit

இதைத்தொடர்ந்து புளூசட்டமாறன் டிவிட்டரில் விஜயும் சல்மான்கானும் பேசிக்கொள்வது போல வடிவேல் காமெடி காட்சி புகைப்படத்தை வைத்து கலாய்த்துள்ளார். ‘எங்க பசங்க யாரு தெரியுமா? டிரெய்லர் வீடியோ பார்க்கும்போது தியேட்டர் சீட்ட எல்லாத்தையும் ஒடச்சி போக்கிரி பொங்கல் வக்கிறவங்க’ என விஜய் சொல்வது போலவும், ‘இவ்வளவுதானா? எங்க பசங்க பட்டாச கொளுத்தி போட்டு தியேட்டரையே கொளுத்தறவங்கடா என் சிப்ஸூ! என்ன பாக்கற?’ என சல்மான்கான் சொல்வது போலவும் பதிவிட்டு கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க: வேற படமா வெளிவந்த விஜயகாந்தின் ‘அக்கா புருஷன்’ – இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..

 

Related Articles

Next Story