Categories: Cinema History Cinema News latest news

வடிவேலு தூக்கியெறிந்த காமெடி நடிகர்… சரியான அங்கீகாரத்தை கொடுத்து உதவிய மணிவண்ணன்…

தமிழ் சினிமாவில் காமெடிகளுக்கென தனி அங்கீகாரம் உள்ளது. அதைபோல் பெரும்பாலான திரைப்படங்களின் வெற்றிக்கு அப்படத்தில் வரும் காமெடி காட்சிகளும் அதில் நடித்த காமெடி நடிகர்களும்தான். அவ்வாறு சில ஆண்டுகள் காமெடியனாக வலம் வந்தவர்தான் அல்வா வாசு.

இவரை பெரும்பாலும் வடிவேல் காமெடிகளில் பார்க்க முடியும். வடிவேலுக்கு துணை காமெடியனாக நடித்திருப்பார். வண்டு முருகன் என வடிவேலு கலக்கிய காட்சிகள் இவர் அவருடன் இணைந்து காமெடிக்கு மேலும் சுவை ஊட்டியிருப்பார்.

இதையும் வாசிங்க:இனி ரஜினியுடன் இணைய வேண்டாம்.. கமல் முடிவுக்கு பின்னால் இப்படி ஒரு முடிவு இருக்கிறதாம்..!

இப்படிபட்டவர்க்கு பின் பெரிய திறமையும் ஒளிந்துள்ளது. இவர் சினிமாவில் காமெடியனாக நடிக்க வரவில்லையாம். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் இசையமைக்கதான் வாய்ப்பு கேட்டு வந்தாராம். கிட்டார், தபேலா போன்ற பல இசை கருவிகளை மிக பிரமாதமாக வாசிப்பாராம். அதனால் இவரின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இவரை ஊக்கப்படுத்தி சினிமாவில் வாய்ப்பு தேட அனுப்பி வைத்தனராம். ஆனால் இவருக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கவில்லையாம்.

அப்போது இவர் நமக்கு இசைத்துறையில் வாய்ப்பு கிடைக்காது என முடிவெடுத்து கொண்டாராம். சில நண்பர்கள் இவரை திரும்ப மதுரைக்கே சென்றுவிடும்படி கூறினார்களாம். அந்த சமயத்தில் இவருக்கு மணிவண்ணனின் பழக்கம் கிடைத்துள்ளது. அல்வா வாசு பொதுவாக நல்ல கதை எழுதகூடியவராம். அதனால் மணிவண்ணனிடம் சென்று உதவி இயக்குனராக சேர்ந்துள்ளார்.

இதையும் வாசிங்க:SK 21 படத்திற்கு கறார் கண்டீசன் போட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! இது என்னடா சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை?

முதலில் மணிவண்ணன் இயக்கிய குவா குவா வாத்துகள் திரைப்படத்தில் உதவி இயக்குனராக இருந்தாராம். பின் அமைதிப்படை திரைப்படத்தில் சத்யராஜ் கஸ்தூரிக்கு அல்வா கொடுப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அப்போது மணிவண்ணன் அந்த அல்வாவை சத்யராஜுக்கு வாங்கி கொடுக்கும் கதாபாத்திரத்தில் வாசுவை அறிமுகப்படுத்தியுள்ளார். இப்படிதான் அல்வா வாசு சினிமாவில் நுழைந்துள்ளார்.

பொதுவாக வடிவேலுவின் காமெடிகள் வெற்றிபெற அவருடன் நடித்த துணை காமெடி நடிகர்களே காரணம். அந்த வகையில் அல்வா வாசுவும் வடிவேலும்வின் காமெடிக்கு அழகு சேர்த்தார். ஆனால் அல்வா வாசுக்கு முடியாத ஒரு சந்தர்பத்தில் கூட வடிவேலும் அவருக்கு உதவவில்லை. இத்தனை திறமைகளை கொண்ட அல்வா வாசு வாழ்க்கையின் கடைசி தருணத்தில் எவருடைய உதவியும் இல்லாமல் உடல்நலகுறைவால் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:மத்த ஹீரோ இதெல்லாம் பண்ணுவாங்களானு தெரியல! விஜய் குறித்து லியோ பட தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்

Published by
amutha raja