அயோத்தி படத்தின் இயக்குனர் மந்திர மூர்த்தி. இவர் தனது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு சொல்கிறார்.
வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ்னா அன்னைக்கு தியேட்டர்ல தான் இருப்பேன். விருகம்பாக்கத்துல ஒரு தியேட்டர்ல 10 ரூபா தான் டிக்கெட். தினமும் 3 படம் பார்ப்பேன். படம் பிடிச்சா 15 தடவை கூட பார்ப்பேன். பாரதிராஜா, பாக்கியராஜ், ஹரி சார் படங்கள் நிறைய பார்ப்பேன்.
ஒவ்வொரு படம் பார்க்கும் போது ரசிகர்கள் எந்தக் காட்சிக்கு வெளியே போகிறார்கள் என்பதைப் பார்ப்பேன். தொடர்ந்து அதே படத்தைப் பார்க்கும் போது எல்லாருமே சரியாக அந்தக் குறிப்பிட்ட காட்சியில் எழுந்து வெளியே போவார்கள். குறிப்பிட்ட காட்சிக்குக் கைதட்டி ரசிப்பார்கள். அந்த வகையில் ஒரு படத்தை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது ‘எங்கே டைரக்டர் மிஸ் ஆகியிருக்காரு?’ன்னு தெரிஞ்சிடும். பாகுபலி முதல் 2 பாகங்களும் 18 தடவை பார்த்திருக்கேன். சுந்தரபாண்டியன் 12 தடவை பார்த்திருக்கேன். படம் நல்லாருக்குன்னா குறைஞ்சது 6 தடவை பார்த்துடுவேன்.
பாரதிராஜா, பாக்கியராஜ் சார் படங்கள் தான் பார்ப்பேன். லாக் டவுனில் பாக்கியராஜ் சாரின் முதல் படத்தில் இருந்து கடைசி படம் வரை தினமும் ஒரு படம் பார்த்தேன். அவரு கரெக்டா இன்டர்வெல்ல ஒரு முடிச்சு போடறாரு. இது எப்படிப்பா சாத்தியம்கற மாதிரி அந்த முடிச்சு இருக்கு. அதே மாதிரி கடைசியில அழகா அதை அவிழ்க்கிறாரு.
கிராமத்துக் காட்சிகளை அழகா எடுக்கிறாரு. பேசிக்கா நாமும் வில்லேஜில் இருந்து வந்ததால அவங்களோட படம் பிடிச்சிருந்தது. பொதுவா நான் ரெண்டு விஷயத்தைத் தான் பார்ப்பேன். எமோஷனல். மாஸ் ஆக்ஷன். ‘சும்மா அடிச்சான். வந்தான்’னு இல்லாம அந்த சண்டைக்கான காரணத்தைப் பார்ப்பேன். பாட்ஷா படத்துல ஆக்ஷன் சீனை நல்லா கொண்டு வந்துருப்பாங்க.
இதையும் படிங்க… நான் நடிச்சி ஆடி காரு.. ஆவணி காரு வாங்க விரும்பல… கண் கலங்கிய ராமராஜன்
ஒரு படத்தைத் திரும்பப் பார்க்கிறான் என்றால் அதோட எமோஷனல் காட்சியாகத் தான் இருக்கும். நான் திரைத்துறைக்கு வந்ததே கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி சார் மாதிரி நல்ல ஒரு கமர்ஷியல் படம் பண்ணனும்னு தான் வந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமரன் திரைப்படம்…
Lubber Pandhu: கடந்த…
Sun serials:…
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…