நான் நடிச்சி ஆடி காரு.. ஆவணி காரு வாங்க விரும்பல... கண் கலங்கிய ராமராஜன்

சாமானியன் படம் இன்று ரிலீஸானதையொட்டி நேற்று மக்கள் நாயகன் ராமராஜன் பிரஸ் மீட் கொடுத்தார். அப்போது நெகிழ்ச்சியான சில விஷயங்களைச் சொன்னார். என்னன்னு பார்ப்போமா...

'எனக்கு எது வருமோ அப்படித் தான் நான் இப்ப வரை நடிச்சிக்கிட்டு இருக்கேன். நான் நடிச்சி ஆடி காரு, ஆவணி காரு வாங்க விரும்பல. அது என் நோக்கமல்ல. நாலு வருஷம் தான் எனது திரைப்பயணம். 86ல நம்ம ஊரு நல்ல நல்ல ஊரு ரிலீஸ். 87ல இருந்து 90 வரை நாலு வருஷம் தான்.

இதையும் படிங்க... சம்பளமே வாங்காம இசையமைத்த எம்.எஸ்.வி!.. அந்த இயக்குனர் ரொம்ப ஸ்பெஷல்!..

ஆனா நான் இன்னைக்கு வரை நிலைச்சி இருக்கேன்னா அதுக்கு காரணம் இளையராஜா தான். அவரோட பாடல்கள் தான் என்னை நினைவு படுத்துது. அந்தப் பாடல்கள் தான் கிராமிய மக்கள், ஏழை எளிய மக்கள், சராசரி மக்கள், உழைக்கும் வர்க்கத்தையும் டச் பண்ணிக்கிட்டே இருக்கு.

எனக்கு பத்திரிகை போய் சொல்லாது. படத்தை நல்லபடியா மக்களிடம் கொண்டு போய் சேருங்க. 12 வருஷத்துக்கு அப்புறமும் என் ரசிகர்கள் எனக்கு இருக்காங்கன்னா கிரேட். எனக்கே கண் கலங்குது. என்னோட படங்கள்னா இதெல்லாம் இருக்காது. என்னை நம்பி வருபவர்களை ஏமாற்றக்கூடாது. எந்த ஜெனரேஷனுக்கும் பொருந்துற மாதிரியான கதை தான் இது' என்கிறார் ராமராஜன்.

இதையும் படிங்க... இளையராஜாவின் மாங்குயிலே.. மாங்குயிலே! அவர பத்தி தெரியாம இவங்க வேற கும்மாளம் போடுறாங்களே

'சாமானியன் கதையோட உண்மையான தகப்பன் கார்த்திக் குமார். இந்தப் படத்துல வரும் ராமராஜனின் கேரக்டர் பெயர் சங்கர நாராயணன். இது என்னோட தாத்தாவின் பெயர்' என்கிறார். 'இது கதை திருட்டு அல்ல. பாக்கியராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி என எல்லாருக்கும் நன்றி.

அந்தக் கதைக்கும் இதுக்கும் சம்பந்தமில்லன்னு லட்டரும் கொடுத்துட்டாங்க. நான் எல்லாத்தையும் இழந்துட்டேன். ஆனா என்னோட அடையாளத்தை இழக்க நான் தயாராக இல்லை' என சொல்கிறார் இந்தப் படத்தின் கதையை எழுதிய கார்த்திக் குமார்.

 

Related Articles

Next Story