அஜித் சொன்னதை செய்யாத இயக்குனர்!. டேக் ஆப் ஆகுமா ஏகே 62!.. பரபரப்பான அப்டேட்!..
இந்த வருடம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் அஜித் நடித்த துணிவு. துணிவுக்கு போட்டியாக விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது. வாரிசு படத்தை முடித்த உடனேயே நடிகர் விஜய் அதற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடிக்க துவங்கி விட்டார்.
அதேபோல நடிகர் அஜித்தும் துணிவு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்தத் திரைப்படத்தின் கதை அஜித்திற்கு பிடிக்காமல் போகவே அவர் அந்த திரைப்படத்தில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் அஜித் அடுத்து எந்த இயக்குனர் இயக்கத்தில் படம் நடிக்கப் போகிறார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. தற்சமயம் தமிழில் ஏற்கனவே மீகாமன், கலகத் தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.
அஜித்தின் பயண திட்டம்:
இந்த படத்தை முடித்துவிட்டு சுற்றுலா செல்ல இருக்கிறார் அஜித். எனவே இந்த படத்தை முடிந்த அளவு சீக்கிரமாக முடிக்க வேண்டும் என அவர் இயக்குனரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் மகிழ் திருமேணி இன்னும் படத்தின் திரைக்கதையையே எழுதி முடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதனால்தான் படத்தின் டைட்டிலை இன்னும் அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மகிழ் திருமேணியின் இந்த செயலால் அதிருப்தியில் இருக்கிறார் அஜித். மேலும் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துக்கொண்டிருக்கும்போது அஜித் படத்திற்கு இன்னமும் டைட்டிலே வெளியிடவில்லை என்பது அஜித் ரசிகர்களுக்குமே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.