அவரை வச்சி படம் எடுக்கனும்னு நினைச்சேன்.. ஆனா சான்ஸ் தரல!.. முத்தையாவிற்கு இப்படி ஒரு ஆசையா?

Published on: May 21, 2023
---Advertisement---

தமிழில் தொடர்ந்து மண் சார்ந்த படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் முத்தையா. பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகன் என்பவன் கலர் கலரான ஆடைகளை போட்டுக் கொண்டு மிகவும் விடுக்காக இருப்பது போன்றுதான் தோன்றுவார்கள்.

ஆனால் முத்தையாவின் திரைப்படங்களில் அதற்கு மாறாக அழுக்கு சட்டை அழுக்கு வேட்டி கட்டிக்கொண்டு கருப்பான தேகத்துடன் இருப்பவரே கதாநாயகனாக இருப்பார். அதேபோல கதாநாயகிகளுக்கும் பெரிதாக மேக்கப் என்று எதுவும் இருக்காது. அவர்களும் கருப்பான தோற்றத்திலேயே இருப்பார்கள்.

ஏனெனில் மதுரை மற்றும் மதுரை சுற்றுவட்டாரத்தை சார்ந்துதான் முத்தையாவின் திரைப்படங்களின் கதைகளங்கள் அமையும். எனவே அங்குள்ள மக்களை போலவே கதாநாயகர்களும் கதாநாயகிகளும் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாட்டை அவர் செய்வார்.

முத்தையாவின் ஆசை

முத்தையா இயக்கிய குட்டி புலி, கொம்பன், மருது, விருமன் போன்ற திரைப்படங்களில் இந்த விஷயங்களை பார்க்க முடியும். தமிழில் கார்த்தி, விஷா,ல் சசி என பெரிய நடிகர்களை கொண்டு பல படங்களை இயக்கிய பிறகும் கூட இயக்குனர் முத்தையாவிற்கு சினிமாவுக்கு வந்த காலம் முதல் ஒரு பெரும் ஆசை இருந்துள்ளது.

அதாவது நடிகர் கமலஹாசனை வைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பது முத்தையாவிற்கு பெரும் கனவாகவே இருந்தது. இதற்காக பலமுறை இவர் கமல்ஹாசனை சந்தித்து வாய்ப்புகளும் கேட்டுள்ளார். கமல்ஹாசனும் ஒவ்வொரு திரைப்படம் முடியும் பொழுதும் அடுத்த படத்தின் போது வாய்ப்பு தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இறுதி வரை இன்னும் அவருக்கு வாய்ப்பு தரவில்லை.

ஒரு பேட்டியில் பேசிய முத்தையா, கமல்ஹாசனிடம் வாய்ப்பு பெற்று ஒரு படமாவது இயக்காமல் சினிமாவை விட்டு செல்ல மாட்டேன் அதற்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.