Connect with us
director mysskin and vijay

Cinema History

உன்கிட்ட எனக்கு அது தோணவே இல்ல!.. விஜயிடமும் வேலையை காட்டிய மிஷ்கின்…

Director Mysskin: தமிழ் சினிமா இயக்குனர்களில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குனர் மிஷ்கின். இவர் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். திரில்லர், சைக்கோ தொடர்பான திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர். ஓநாயும் ஆட்டுகுட்டியும், பிசாசு, சைக்கோ போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

நிஜ வாழ்வில் இவர் மிகவும் சுயநலமானவர். தன்னுடைய காரியம் முடியும் வரை மட்டுமே ஒருவருடன் நட்பு வைத்திருப்பார். தன்னுடைய காரியம் முடிந்த பின் அவர்களை கழட்டி விட்டுவிடுவார் என பலமுறை விமர்சிக்கப்பட்டுள்ளார்.

இதையும் வாசிங்க:சிவகார்த்திகேயனுக்கு இது போதாத காலம்தான்! ரவுண்டு கட்டி அடிக்க தயாராகிட்டாங்க – புதுசா இன்னொரு பிரச்சினையா?

இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான யூத் திரைப்படத்தில் உதவி இயக்குனராய் பணியாற்றியுள்ளார். அப்போது இவர் தினமும் விஜயை பார்ப்பாராம். ஆனால் ஒரு நாள் கூட விஜயுடன் இவர் பேசியது இல்லையாம்.

அப்படம் முடிவடையும் நிலையில் இருந்தபோது விஜய் ஒருநாள் மிஷ்கினிடம் ‘அண்ணா என்ன அண்ணா.. என்னிடம் பேசவே மாட்றீங்க’ என கேட்டுள்ளார். அதற்கு மிஷ்கினோ ‘தெரியல தம்பி.. பேசனும்னு தோணல’ என பதிலளித்துள்ளார். மேலும் தனக்கு நிறைய வேலை இருந்ததால் பேச முடியவில்லை. என்னை தவறாக நினைத்து கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க:ஒன்னு கேட்டா ஒன்னு ஃப்ரீ! இமான் சிவகார்த்திகேயன் இடையே இதுதான் நடந்தது – டபுள் டிரீட் வைத்த பயில்வான்

அதற்கு விஜய் ‘ஆமாம்… நீங்க கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம சுத்தி சுத்தி வருவதை நான் பார்த்தேன்’ என கூறியுள்ளார். மேலும் வருங்காலத்தில் நாம் இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என கூறியுள்ளார்.

மிஷ்கின் சர்ச்சையாக பேசுபவர் என திரையுலகில் அவரை எல்லோரும் சொல்வதுண்டு. சில சமயம் அவரின் பேச்சு முகம் சுளிக்கும் வகையில் கூட இருக்கும். அவரின் சுபாவமே அப்படித்தான். தன்னை பெரிய ஜீனியஸ் என நினைப்பார். அதை விஜயிடமும் அவர் காட்டியுள்ளார் என்பது இதை பார்க்கும்போது புரிகிறது.

தற்போது லியோ திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.  இப்படத்தில் மிஷ்கினிற்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தினை இயக்குனர் லோகேஷ் கொடுத்துள்ளார். விஜய் மற்றும் மிஷ்கினின் ஆக்‌ஷன் காட்சிகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் வாசிங்க:சிவகார்த்திகேயன் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. டி. இமானை தொடர்ந்து அவரது முதல் மனைவி ஓபன் பேட்டி!..

google news
Continue Reading

More in Cinema History

To Top