தமிழ் சினிமாவில் இன்று ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக நடித்து இன்று ஒரு மாபெரும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் சிம்பு. தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் கமல் புரொடக்ஷனிலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். மாநாடு படம் அவருக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. அதுவரை அவருடைய மார்க்கெட் அவ்வளவுதான் என பேசிக்கொண்டிருந்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த படமாக மாநாடு திரைப்படம் அமைந்தது.
இதையும் படிங்க: ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்!.. அஜித் ரூட்டில் ஆட்டோ ஓட்டும் ஏ.ஆர். முருகதாஸ்!.. பாவம் அவர்!..
அந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து சிம்புவை இன்னொரு உயரத்திற்கு அழைத்துச் சென்றது. இன்று ஒரு ஸ்டைலிஷ் ஆன ஹீரோவாக ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கிறார் சிம்பு. உண்மையிலேயே கோலிவுட்டில் சிம்புவுக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை போல் வேறு யாருக்கும் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது.
அதேபோல் சிம்புவை ரசிக்கும் ரசிகர்கள் மாதிரி வேறு எந்த நடிகர்களுக்கும் அந்த அளவுக்கு ரசிகர்கள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் சிம்புவை பற்றி ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே பாண்டிராஜுக்கும் சிம்புவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக இணையதளத்தில் ஒரு செய்தி உலா வருகின்றது.
இதையும் படிங்க: விமல் கூட இத்தனை பிக் பாஸ் பிரபலங்களா?.. விலங்கு வெப்சீரிஸுக்குப் பிறகு இதாவது விளங்குமா?..
இது நம்ம ஆளு என்ற படத்தை எடுத்தவர் தான் பாண்டிராஜ். அப்போது இருவருக்கும் இடையே ஏகப்பட்ட மனக்கசப்பு இருந்ததாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை என பாண்டிராஜ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். சிம்புவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது.
படப்பிடிப்பிற்கு தாமதமாகத்தான் வருவார். ஆனால் எட்டு மணி நேர காட்சியை 5 மணி நேரத்தில் நடித்து முடித்துக் கொடுப்பவர் சிம்பு. அவ்வளவு திறமையான நடிகர். ஒரு ஸ்வீட்டான நபர். பிரச்சனை அவருடைய அம்மா அப்பா அதாவது ப்ரொடக்ஷன் தரப்பில் தான் எனக்கு இருந்தது.
இதையும் படிங்க: திருமண நாளில் செம லெக் ஷோ!.. அம்மா ஆனாலும் அப்படி போஸ் கொடுப்பதை நயன்தாரா நிறுத்தலையே!..
சிம்புவால் எனக்கு இதுவரை எந்த பிரச்சினையுமே கிடையாது. இப்பொழுது பார்த்தாலும் கூட ஒருவருக்கொருவர் நாங்கள் நட்பு பாராட்டி தான் வருகிறோம்.சிம்புவுக்கும் என்னை மிகவும் பிடிக்கும் என பாண்டிராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…