இந்திய சினிமாவிலேயே பாண்டியராஜன் மட்டும் செய்த சாதனை!.. என்ன தெரியுமா?

சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு பெரும் இயக்குனராவர்களில் பாண்டியராஜன் முக்கியமானவர். அப்போது பலர் இயக்குனராக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினர். நடிகர் பாக்கியராஜ்தான் இதை முதன் முதலில் துவங்கி வைத்தார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் பிறகு தனியாக திரைப்படங்களை இயக்க துவங்கினார்.

அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு இயக்குனராக வந்த பலரும் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டனர். முக்கியமாக பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக இருந்த பலரும் பின்னர் நடிகரானார்கள்.

அதில் பாண்டியராஜனும் ஒருவர். பாண்டியராஜன் மிக சிறு வயதிலேயே சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்துவிட்டார். ஆனால் பல இடங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் பாக்கியராஜுடம் வாய்ப்பு தேடி வந்தார்.

பாண்டியராஜன் செய்த சாதனை:

அவருக்கு பாக்கியராஜ் வாய்ப்பு தந்தார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே திரைப்படம் இயக்குவது குறித்து நிறைய கற்றுக்கொண்டார் பாண்டியராஜன். பாக்கியராஜ் இயக்கிய சில படங்களில் காட்சிகளையே பாண்டியராஜன் தான் எடுத்தார்.

பிறகு தனியாக படம் இயக்க முடிவு செய்தார் பாண்டியராஜன். அப்படி அவர் இயக்கிய முதல் படம்தான் கன்னிராசி. இந்த படத்தை இயக்கும்போது கூட பாண்டியராஜனுக்கு சிறுவயதுதான். இதுக்குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறும்போது அப்போது இந்திய சினிமாவிலேயே குறைந்த வயதில் திரைப்படம் இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜன் மட்டும்தான் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரவுடியை ஓட ஓட விரட்டி அடித்த ரஜினி!.. அப்பவே அவர் ஹீரோதான் போல!..

 

Related Articles

Next Story