
Cinema History
பிரபுசாலமன் இயக்கத்தில் மிளிர்ந்த சூப்பர்ஹிட் படங்கள்
தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பிரபுசாலமன். இவரது படங்கள் இயற்கையின் மீதுள்ள பற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் விதத்தில் இருக்கும். படங்களை ரசனை குறையாமல் பார்த்து ரசிக்கலாம்.
எவ்விதமான ஆபாசமான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாமல் படம் பார்ப்பவர்களை ஆர்வமுடன் ரசிக்க வைக்கும். இதனால் இவரது படங்கள் வந்து விட்டால் தாய்க்குலங்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு படையெடுக்க ஆரம்பித்து விடும். இவரது பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் அடித்துள்ளன. அவற்றில் ஒருசிலவற்றை இப்போது பார்ப்போம்.
கும்கி
2012ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தை லிங்குசாமியும், சுபாஷ் சந்திர போஸ_ம் தயாரித்தனர். இமான் இசை அமைத்துள்ளார். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா, அஸ்வின் ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். சொல்லிட்டாளே அவ காதல, சொய் சொய், அய்யய்யய்யோ ஆனந்தமே, எல்லா ஊரும், ஒண்ணும் புரியல, நீ எப்போ புள்ள ஆகிய பாடல்கள் சக்கை போடு போட்டன.
மைனா

maina
பிரபு சாலமன் கதை எழுதி இயக்கிய படம். 2010ல் வெளியானது. இமான் இசை அமைப்பில் பாடல்கள் சூப்பர். விதார்த், அமலாபால், சேது, தம்பி ராமையா, சுசான் சார்ஜ், செவ்வாழை உள்பட பலர் நடித்துள்ளனர். தம்பி ராமையாவின் சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. மைனா iமான, கிச்சு கிச்சு தாம்பலம், நீயும் நானும், ஜிங்கு சிக்கா, கையப்புடி உள்பட பல பாடல்கள் உள்ளன.
காடன்

kaadan
2021ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான படம் காடன். ராணா தக்குபாடி, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், ஸ்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். சாந்தனு மொய்த்ரா இசை அமைத்துள்ளார். தாலாட்டு பாடும், சின்ன சின்ன, இதயமே ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படத்தை கும்கியின் 2ம் பாகமாக நினைத்து வரவேற்றனர் கும்கி படத்தில் நடித்த யானை தான் இதிலும் நடித்தது. யானைகளுக்கு எதிரான மனித செயல்களைப் பற்றி இந்தப்படம் அலசுகிறது. .
கயல்

kayal
2014ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பிரபுசாலமன். சந்திரன், ஆனந்தி, பிரபு, வின்சென்ட் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். பறவையாய் பறக்கிறோம், எங்கிருந்து வந்தாயோ, கூடவே வரமாதிரி, என் ஆளைப் பாக்கப்போறேன், உன்ன இப்ப பாக்கணும், உன்மேல ஆசை வச்சேன், எங்கபுள்ள இருக்க ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
தொடரி

thodari Dhanush and Keerthi suresh
2016ல் வெளியான படம் தொடரி. பிரபுசாலமன் இயக்கிய இந்தப்படத்திற்கும் இமான் தான் இசை அமைத்துள்ளார். தனுஷ், கீர்த்தி சுரேஷ், பூஜா காவேரி, கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, கருணாகரன், ராதாரவி, போஸ்வெங்கட், நாசர், ஞானசம்பந்தன், பட்டிமன்றம் ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். அடடா இது என்ன, ஊரெல்லாம் கேக்குதே, மனுசனும் மனுசனும், போன உசுரு, லவ் இன் வீல்சு உள்பட பல பாடல்கள் உள்ளன.