இத சரிபண்ணிட்டா விஜயகாந்தை பழைய நிலைக்கு கொண்டு வந்துடலாம்!.. இயக்குனர் கூறிய புது டிரிக்..
தமிழ் சினிமாவில் லட்சிய நடிகராகவே வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் வந்தாலும் மற்றவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதற்காக பல உதவிகளை ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்தார். இவருக்கு ஆரம்பகட்ட காலங்களில் பக்க பலமாக இருந்தவர் அவரின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தர்.
இப்படி ஒரு நட்பை சினிமாவில் யாரும் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களுக்குள் இருந்த புரிதலும் , விட்டுக் கொடுத்தலும் , பாசமும் மற்றவர்களை பொறாமை பட வைத்தது. எம்ஜிஆருக்கு பிறகு யுனிட்டில் உள்ள அத்தனை பேருக்கு சாப்பாடு என்பதை விஜயகாந்த் கொண்டு வந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர்.
அதற்காக மனோ நிலைமையை விஜயகாந்திடம் ஊட்டியவரே ராவுத்தர் தான். மகாபாரதத்தில் எப்படி கர்ணனும் துரியோதனும் நட்புக்கு இலக்கணமாக இருந்தார்களோ அதே மாதிரி சினிமாவில் இரு கர்ணன்களாக இருந்தவர்கள் விஜயகாந்தும் ராவுத்தரும். ஆனால் அவர்கள் நட்பில் கரும்புள்ளியாக அமைந்தது ஒரு வேளை அவரது திருமணம் கூட இருக்கலாம் என பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி.
மேலும் அவர் கூறும் போது ராவுத்தர் 2015 ஆம் ஆண்டு மரணமடைந்திருக்கிறார். அப்போது அவரை பார்க்க வந்த விஜயகாந்த் மிகவும் மன வேதனையில் இருந்தாராம். ராவுத்தரை மரண படுக்கையில் பார்த்ததில் இருந்தே விஜயகாந்திற்கு ஏதோ ஒரு வித குற்றவுணர்வு ஏற்பட்டதாம். ஏனெனில் கடைசி காலத்தில் ராவுத்தரிடம் பேசுவதையே நிறுத்தியிருக்கிறார் கேப்டன்.காரணம் பிரேமலதா மற்றும் மைத்துனர் சதீஷ் இருக்கலாம் என பிரவீன் காந்தி கூறினார்.
அந்த குற்றவுணர்வு தான் விஜயகாந்தை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கிறதாம். அதிலிருந்தே விஜயகாந்தின் உடல் நிலையிலும் சரி மன நிலையிலும் சரி சரியான முன்னேற்றம் இல்லை என்றும் கூறினார். அதனால் விஜயகாந்தை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்றால் அவரின் மனதில் இருக்கும் அந்த குற்றவுணர்வை எடுத்து வெளியே விட வேண்டும் ,
அது தான் ஒரே வழி, மேலும் நம் மனதில் எதை பற்றி ஆழமாக யோசிக்கிறோமோ அது நம்மை நிம்மதியாக இருக்க விடாது, விஜயகாந்த் மனதிலும் ராவுத்தரின் எண்ணங்கள் இப்பொழுது வரை ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன. அதை விட்டு விட்டால் பழைய மாதிரி கேப்டனை நாம் பார்க்க முடியும் என்று பிரவீன் காந்தி கூறினார்.
இதையும் படிங்க : வரலாறு போற்றும் கதாபாத்திரம்!.. சிவாஜிக்காக விட்டுக் கொடுத்த ஜெமினிகணேசன்!.. ஏன்னு தெரியுமா?..