‘தங்கலான்’ படத்தை சத்தியமா பார்க்க மாட்டேன்! படமா எடுக்குறானுங்க? இவரே இப்படி சொல்லலாமா?
Thangalaan Movie: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் தங்கலான். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸாக இருக்கிறது. கே.ஜி.எஃபில் நடக்கும் ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்தே இந்தப் படம் தயாராகியிருக்கிறது. மேலும் தங்கலான் படத்தில் விக்ரம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருக்கிறார்.
படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமான முயற்சிகளோடு விக்ரம் ஒவ்வொரு படங்களிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த தங்கலான் திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய பேரை பெற்றுத்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: விஜய் டெலிவிஷன் விருது விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகை யார் தெரியுமா? மற்ற விருதுகளின் விவரங்கள்!…
தங்கலான் திரைப்படத்திற்காக விக்ரம் ஆஸ்கார் விருதை கூட வெல்வார் என்று சொல்லிக் கொண்டே வருகிறார்கள். படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால் சரியான நேரம் பார்த்து படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என இதுவரை காத்துக் கொண்டிருந்தார்கள். படத்தை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தங்கலான் படத்தை சத்தியமாக பார்க்கவே மாட்டேன் என ஒரு இயக்குனர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் பா. ரஞ்சித் படம் என்றாலே பார்க்க மாட்டேன் என்ற முடிவோடுதான் ஆரம்பத்தில் இருந்து இருந்திருக்கிறார். இதில் தங்கலான் படமும் அடங்கும். ஒரே அழுக்காக நடிப்பதெல்லாம் பெரிய ஹீரோயிசமா என அந்த இயக்குனர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: இப்ப என்ன பெரிசா பர்ஸ்ட்லுக், போஸ்டர்னு… அப்போ பாக்கியராஜ்கிட்ட இருந்த தில்லு யாருக்காவது இருக்கா?
அந்த காலத்தில் கர்ணன் திரைப்படத்தையே எந்தளவுக்கு அழகாக பிரம்மாதமாக எடுத்திருந்தார்கள். ஆனால் இந்தப் படம் முழுவதும் அழுக்காக இருக்கிறது. ஹீரோ என்றால் எப்படி இருக்க வேண்டும்? இந்த மாதிரி உடம்பு முழுக்க அழுக்கு பூசிக் கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
படமா எடுக்குறாங்க? ஒரே வன்முறையாகத்தான் இருக்கிறது. அதனால்தான் ராயன் திரைப்படத்தையும் நான் பார்க்கவில்லை. எனக்கு ரத்தம் என்றாலே ஒரு அலர்ஜி. இப்ப உள்ள தலைமுறைகளுக்கு என்ன மாதிரியான கருத்தை கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதுவும் 16 லிருந்து 20 வயது உள்ளவர்கள் எதையும் சீக்கிரம் உள்வாங்கிக் கொள்ளும் வயதுடையவர்கள்.
இதையும் படிங்க: நீங்க இழுப்பீங்கனு தெரியும்… அதுக்குனு ஒரு காட்சிக்கு 26 நாளா? ஆடுகளம் படத்தில் நடந்த சம்பவம்!..
அவர்களிடம் இந்த மாதிரியான கத்தி, கொலை, கொள்ளை என படங்களின் மூலம் காட்டுவது சரியா? அதனால்தான் ராயன் மற்றும் தங்கலான் படங்களை பார்க்க மாட்டேன் என அந்த இயக்குனர் கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. ரட்சகன் படத்தை எடுத்த பிரவீன் காந்திதான்.