அந்தகன் படம் வருவதற்கு முன்பே வெற்றியைத் துல்லியமாகக் கணித்த இயக்குனர்... அட அவரா?
அஜீத், விஜய் வளர்ந்து வந்த காலகட்டத்திலேயே பிரசாந்தும் வளர்ந்து வந்தார். அப்போது தான் நான் சினிமாவில் என்டர் ஆகிறேன். ஆனால் திடீர்னு காணாமல் போகிறார். எவ்வளவு வலி இருக்கும்? விஜய், அஜீத், பிரசாந்த் என்ற வரிசை விஜய், அஜீத்தாக சுருங்கி விட்டது. அவங்க ரெண்டு பேரும் வேகமாக வளர்ந்து எங்கேயோ போயிட்டாங்க. அந்த இடத்தை விட்டுவிட்டோமேன்னு பிரசாந்த் நினைச்சிருக்கலாம்.
அவரது தந்தை தியாகராஜனும் மகனுக்காக பார்த்து பார்த்து பல படங்களில் நடிக்க வைத்தவர். தன் மகனோட கேரியர் நல்லா வரணும்கறதுக்காக தன்னோட நடிப்பையே நிறுத்திக் கொண்டார். தந்தைக் கிழித்த கோட்டைத் தாண்டாத மகனாகவும் பிரசாந்த் இன்று வரை இருந்து வருகிறார்.
மகனைக்கூட தியாகராஜன் 'பிரசாந்த் சார்'னு தான் கூப்பிடுவாராம். ஒருமுறை நடிகர் ராஜேஷ் தியாகராஜனிடம் பிரசாந்தின் வீழ்ச்சிக்கு நீங்க தான் காரணம்னு சொல்றாங்களேன்னு நேரடியாகவே கேட்டுவிட்டாராம். அதைக் கேட்டு சிரித்துக் கொண்டாராம் தியாகராஜன். ஆனால் உள்ளுக்குள் எவ்வளவு வலி இருக்கும்?
அதை எல்லாம் சரிசெய்யணும். பிரசாந்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வரணும் என்ற வெறியில் இந்தியில் இருந்து சூப்பர்ஹிட்டான 10 படங்களின் ரைட்ஸை வாங்கி வைத்துள்ளார். அதுல ஒண்ணு தான் அந்தாதூண். அது தான் இப்போ அந்தகனா வந்துருக்கு. இந்தப் படம் சைனாவில் 500 கோடியை வசூலித்துள்ளது.
அந்தப் படத்தில் கேரக்டர்களுக்கு யார் யார் பொருத்தமாக இருந்தார்களோ, அதே போல தமிழிலும் தியாகராஜன் ஆர்டிஸ்டுகளைக் கரெக்டாக செலக்ட் பண்ணியுள்ளார். அது மட்டுமல்லாமல் பிரசாந்தோட இப்போதைய கெட்டப்புக்கு ஏற்ற கதாபாத்திரம் தான் அந்தகன். அதனால இந்தப் படம் 100 சதவீதம் சொல்றேன். கண்டிப்பா வெற்றி பெறும்.
விஜய் சாரை இனி மேல் மீற முடியாது. தொடர்ந்து நாலஞ்சு ஹிட் கொடுத்தாருன்னா அந்தக் கேட்டகிரிக்குத் தொடர்ந்து வரலாம். தொடர்ந்து விஜய், அஜீத், பிரசாந்த்னு தான் இருக்குமே தவிர விஜயை முந்தி விட்டார் என்பதற்கு வாய்ப்பு இல்லை. விஜய்க்கு இப்ப இருக்கிற இடம் அவருக்கே தெரியாது. அது மாதிரி தான் ரஜினிக்கும். கிராமத்துல இருக்குற ரசிகன் இவங்களை வைத்து எதை வேண்டுமானாலும் பண்ணுவான்.
ஆனா இவங்களுக்கு அது தெரியாது. எம்ஜிஆருக்குத் தெரிந்தது. அதனால் தான் அவர் ஆரம்பத்தில இருந்தே அவர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். இவங்க அவர்களை ரசிகர்களாகவே வச்சிருக்காங்க. நெருங்கல. நெருங்கும்போது தான் அவங்களோட சக்தி தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல இயக்குனர் பிரவீன்காந்தி தெரிவித்துள்ளார். இவர் பிரசாந்த், சிம்ரனை வைத்து ஜோடி என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.