ரஜினியுடன் சந்திப்பு எப்படி? ஆங்கரையே அசர வைத்த பிருத்விராஜ் சொன்னது இதுதான்!

rajni pruthivraj
லூசிபர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் 2ம் பாகம் வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. மோகன்லால் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. லூசிபர் 2 எம்புரான் படத்தின் இயக்குனர் பிருத்விராஜ். இவர் தனது படம் குறித்தும், ரஜினியை சந்தித்தது பற்றியும் என்ன சொல்றாருன்னு பாருங்க.
2014ல காவியத்தலைவன் படத்துல நடிச்சேன். டைரக்டர் வசந்தபாலன். சினிமா இல்லன்னா அவரு இறந்து போயிடுவாரு. அந்தளவு சினிமாவை விரும்புறவரு. எனக்கு அந்தப் படத்துக்கு அப்புறம் நிறைய வாய்ப்பு வந்தது. அப்போ அவங்ககிட்ட நான் இதைத்தான் சொன்னேன். 2014ல கடைசியா ஒரு படம் நடிச்சேன். மாநில விருது கிடைச்சது.
இதே மாதிரி நான் நடிக்க வாய்ப்பு கிடைச்சா தமிழ்சினிமாவுல நடிப்பேன். முன்னாடி நடிச்சதை விட நல்ல பேரு கொடுக்குற மாதிரி நடிக்கணும். ஏன்னா தமிழ்சினிமா எனக்கு சாப்ட் கார்னர். மொழி, சத்தம்போடாதே, கனா கண்டேன், பாரிஜாதம் என பல படங்களைச் சொல்லலாம்.
இப்போது லூசிபர் 2 எம்புரானில் நடித்துள்ளார். அதே போல ரஜினியின் கூலி படத்திலும் நடித்துள்ளார். ரஜினியைப் பொருத்தவரை மொழி படத்தில் நடித்தபோதே என்னைப் பாராட்டியவர். இப்போது லூசிபர் 2 எம்புரான் படத்தோட டிரெய்லர் லாஞ்ச் பண்ணும்போதும் பாராட்டினார். அவர் உலக சினிமாவின் லெஜண்ட்.

pruthiviraj rajni
அவருக்கு என்னைப் பற்றித் தெரியுது. லூசிபர் 2 டிரெய்லர் ரிலீஸ் ஆன நேரத்துல ரஜினி சாருக்குத் தான் முதல்ல போட்டுக் காட்டுனேன். மோகன்லால் சார், தயாரிப்பாளர் பார்க்குறதுக்கு முன்னாடி அவருக்குத்தான் காட்டினேன். அவர் என்னைப் பார்த்ததும் வா வான்னு உள்ளே அழைத்து டிரெய்லரைத் திரும்ப திரும்ப போடச் சொன்னார்.
கட்டிப்பிடித்துப் பாராட்டினார். ரஜினியைப் பற்றி ஆங்கர் கேட்டதும், அவரிடம் பிருத்விராஜ் ரஜினியை நீங்க பார்த்துருக்கீங்களான்னு கேட்டார். அதற்கு அவர் தூரத்துல இருந்து ஒரு தடவை பார்த்ததாகச் சொன்னார். அப்போது பிருத்விராஜ் ஆச்சரியத்துடன் ரஜினி வந்து என்ன மாதிரி? 5 நிமிஷம் அவருக்கிட்ட பேசிப் பாருங்க. வேற மாதிரின்னு சொல்லி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார் பிருத்விராஜ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.