அந்த நடிகை வீடியோவதான் மொபைல்ல பாத்துக்கிட்டே இருப்பேன்!.. ராஜமவுலிக்கு இப்படி ஒரு ஆசையா?..
Director Rajamouli: இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இயக்குனர் ராஜமௌலி. பாகுபாலி என்ற படத்தை பெரிய அளவில் எடுத்து ஒட்டுமொத்த சினிமாவையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.
தமிழில் நான் ஈ என்ற ஒரு ஹிட் படத்தை கொடுத்தார். ஆர்.ஆர்.ஆர் என்ற மற்றுமொரு பிரம்மாண்டத்தை கொடுத்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் ராஜமௌலி. இன்று பல கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ராஜமௌலிதான் முன்னிலையில் இருக்கிறார்.
இதையும் படிங்க : தளபதி69க்கு விஜய் வைத்திருக்கும் ஐடியா இதுதான்… வேற இயக்குனருக்கு வாய்ப்பே இல்ல!
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு கோலிவுட் நடிகையின் டான்ஸ்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தன் போனிலோ அல்லது டிவியிலோ அவர் டான்ஸைத்தான் அடிக்கடி மீண்டும் மீண்டும் போட்டுப் பார்ப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை. நடிகை சுருதிஹாசன். சமீபத்தில் சலார் பட ப்ரோமோஷனுக்காக பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸுடனான ஒரு பேட்டி இணையத்தில் போய்க் கொண்டிருந்தது. அவர்களிடம் ராஜ மௌலி உரையாடிக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: தற்கொலைக்கு முயன்ற எஸ்.எஸ்.ஆர்!.. காரணம் அந்த பிரபலம்தான்!.. இவ்வளவு நடந்திருக்கா?!..
அப்போது பிரசாந்த் நீலிடம் ‘சலார் படத்தில் எனக்கு ஒரே ஒரு புகார் இருக்கிறது. சுருதிஹாசனின் டான்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். சாரு ஷீலா மற்றும் ரேஸ் குரம் போன்ற படங்களில் அவர் நடனத்தை நான் ரசித்தேன். அந்த இரு படங்களின் பாடலைத்தான் என் போனில் மீண்டும் மீண்டும் போட்டுப் பார்ப்பேன்.’
ஆனால் நீங்கள் வெளியில் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன். சலார் படத்தில் எந்தவொரு டூயட் பாடலும் இல்லை என்று சொன்னீர்ங்கள். அதனால் நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என பிரசாந்த் நீலை பார்த்து ராஜமௌலி கூறினார்.
இதையும் படிங்க: வாரிசு vs துணிவு போட்டியில் யார் ஜெயிச்சது தெரியுமா? சொன்னா நம்ப மாட்டிங்க..!