தனுஷ் ரொம்ப பாசிட்டிவ் அண்ட் பவர்புல்!.. புது படம் பற்றி பேசும் அமரன் பட இயக்குனர்!....
Rajkumar periyasamy: ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி. துப்பாக்கி படத்தில் கூட உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். கவுதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் எனும் படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. ஆனால், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
எனவே, அடுத்து தான் யார் என நிரூபிக்கும்படியான ஒரு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து ஒரு உண்மை கதையை கையில் எடுத்தார். இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து தீவிவராதிகளின் தாக்குதலில் உயிரிழந்த முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது.
கடந்த 4 வருடங்களாக இந்த கதைக்காக உழைத்திருக்கிறார். முகுந்த் வரதராஜன் ஏன் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டார்?.. இந்திய இராணுவத்தில் பணிபுரியும் போது எப்படியெல்லாம் திட்டமிட்டு தீவிரவாதிகளை அழித்தார்?.. அவரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை, இறுதியாக தீவிரவாதிகளை கொல்லும் முயற்சியில் அவர் எப்படி மரணமடைந்தார் என எல்லாவற்றையும் சம்பந்தப்பட்டவர்களின் கேட்டு தெரிந்துகொண்டு படத்தை இயக்க முடிவெடுத்தார்.
இந்த படம்தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படமாக உருவானது. முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க அவரின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
எனவே, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க பல பெரிய நடிகர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், தனுஷுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தனுஷே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் இப்படம் பற்றி பேசிய ராஜ்குமார் ‘தனுஷை நான் 2023ம் வருடம் நவம்பர் மாதம் சந்தித்தேன். டிசம்பர் மாதம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. அவர் மிகவும் பாசிட்டிவ். நான் பிளஸ் டூ படித்துகொண்டிருக்கும் போதுதான் அவரின் துள்ளுவதோ இளமை வெளியானது. காதல் கொண்டேன் மிகவும் பிடித்திருந்தது.
இந்த இரண்டு படங்களின் பாடல்களைத்தான் காலர் டியூனாக வைத்திருந்தேன். அவர் ஃபவர் புல்லான நடிகர். அதேநேரம் மிகவும் எளிமையாக இருக்கிறார். எதை நினைத்தும் பயப்படுவதில்லை. மிகவும் ஓப்பனாக இருக்கிறார். அவரே இப்போது படங்களை இயக்குகிறார். அவர் அணுகு முறை மிகவும் எளிமையாக இருக்கிறது. அவர் உண்மையாக இருப்பதால் அவருடன் வேலை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது’ என பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா?.. அமரன் இயக்குனரிடம் விஜய் சொன்ன விஷயம்!..