கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா?.. அமரன் இயக்குனரிடம் விஜய் சொன்ன விஷயம்!..
நடிகர் விஜயை சந்தித்தபோது அவர் பேசியது குறித்து அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய புகழை எட்டி இருக்கின்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. துப்பாக்கி திரைப்படத்தில் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராஜ்குமார் பெரியசாமி. அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ரங்கூன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து அமரன் என்கின்ற ஒரு சிறந்த கதையை இயக்கி இருக்கின்றார்.
இதையும் படிங்க: Sorgavaasal: ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்…
நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் அவரின் மனைவியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. ஐந்து வாரங்களாக இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது வரை 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
விரைவில் 350 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் அவர்கள் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய புகழை எட்டி இருக்கின்றார்.
இப்படம் நடிகராக சிவகார்த்திகேயனுக்கு மட்டுமில்லாமல் இயக்குனராக ராஜ்குமார் பெரியசாமிக்கும் மிகப்பெரிய பேரையும் புகழையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் கைகோர்த்து திரைப்படங்களை இயக்குவதற்கு தயாராகி வருகின்றார். அடுத்ததாக தனுஷின் 55 ஆவது படத்தை இயக்க இருக்கின்றார். இது தொடர்பான பூஜை புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜயை சந்தித்த ராஜ்குமார் பெரியசாமி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜயை சந்தித்தபோது அவர் என்ன கூறினார் என்பது குறித்து பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நான் அவரிடம் 25 நிமிடம் பேசியிருப்பேன்.
இதையும் படிங்க: Vidamuyarchi:விடாமுயற்சி டீசரில் இந்த கேரக்டரை கவனிச்சீங்களா? வேற லெவல் குக்கிங்கா இருக்கே
ஒரு அற்புதமான மனிதர். துப்பாக்கி படத்தில் பார்த்தபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கின்றார். மேலும் என்னிடம் கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கக் கூடாதா? வந்திருந்தா நம்ம சேர்ந்து ஒரு படம் பண்ணி இருக்கலாமே, ஆனா இப்போ'.. என்று பேசியிருந்ததாக கூறியிருந்தார். ஒருவேளை நடிகர் விஜய்க்கு தளபதி 69 திரைப்படம் கடைசி படமாக இல்லை என்றால் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கட்டாயம் ஒரு திரைப்படத்தில் விஜய் நடித்திருப்பார். ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது என்று ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.