பாண்டியராஜன்கிட்ட அசிஸ்டண்டா சேர வந்த ரமேஷ் கண்ணா... எத்தனை சலாம் போட்டும் பிரயோஜனமே இல்லையே...?!
நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணா தனது ஆரம்ப கால திரையுலக அனுபவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
பாண்டியராஜன்கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டர் மூணு பேரு இருக்காங்க. உத்தமன், பொன்முடிராஜன், சந்திரன் இவங்கள எல்லாம் ப்ரண்ட்ஷிப்பா வச்சிருந்தேன். அவங்கக்கிட்ட எப்படியாவது சேர்த்து விடுப்பான்னு கேட்பேன். சரி சரின்னு சொல்வாங்க. அதெப்படி சேர்த்து விடுவாங்க. அதெல்லாம் நம்மளை ஏமாத்துறதுக்கு சொல்வாங்க. உதைப்பாரு. சொல்ல முடியாது. எப்படி சொல்ல முடியும்? பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், ஜிஎம்.குமார் கன்னிராசி படத்துக்காக டிஸ்கஷன் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.
ஒரு தடவை உத்தமன், பொன்முடிராஜன் கிட்ட எல்லாம் பேசிக்கிட்டு இருக்கும்போது பாண்டியராஜன் சார் உட்கார்ந்துருந்தாரு. என்னோட அறிவுத்திறமையை வெளிப்படுத்தணும்னு பேசுவேன். 'அகிராகுரோசோவா பெரிய டைரக்டர் சார்...'னு அவர் எடுத்த ஜப்பான், பிரெஞ்ச் படங்களைப் பற்றிப் பேசுவேன். 'நீங்க அதெல்லாம் பார்ப்பீங்களா சார்...'னு பாண்டியராஜன் சார் கேட்பாரு. 'என்ன சார் நான் சொசைட்டி மெம்பர் சார்..'னு சொல்வேன்.
நான் தான் முக்கியமான ஆளுன்னு சொன்னேன். 'நான் பார்க்க முடியலையே...'ன்னு சொன்னார். அப்போ 'வாங்க சார் நான் வாங்கித் தரேன்'னு... ஒரு கார்டை வாங்கிட்டுப் போய் நாங்க போவோம். அப்போ நாங்க ரெண்டு சைக்கிள்ல போவோம். அந்த சைக்கிள கன்னிராசில பார்க்கலாம். அடிக்கடி படத்துக்குப் போவோம். சூட்டிங் ஆரம்பிக்கப் போகுது. சரி. நம்ம தான் பழகிட்டோமே. எப்படியும் நம்மை சேர்த்துக்குவாருன்னு நினைச்சேன். அம்பாசிடர் கார்ல உட்கார்ந்துருக்காரு.
அவரைப் பார்த்து வணக்கம் வக்கிறேன். கண்டுக்கவே இல்லை சார். நேரா பார்த்துக்கிட்டு இருக்காரு. அவருக்குத் தெரியும். இவன் அசிஸ்டண்ட் டைரக்டர் சான்ஸ் கேட்கப்போறான்னு. ஏற்கனவே அவர் 3 பேரை வச்சிருக்காரு. ஆனா அவரு சேர்க்கவே இல்ல. நல்லா பழகியும் இப்படி ஆயிடுச்சே. சரி நமக்கு அவ்வளவு தான்னு ஆயிடுச்சு.
இதையும் படிங்க... கல்யாணத்துக்கு முன்னாடி பிரேம்ஜி சொன்ன காமெடி செமயா இருக்கே…! பயில்வான் சொல்றாரு பாருங்க…
கடைசில கன்னிராசி படத்துக்கு பைனான்ஸ் பிரச்சனை... அசிஸ்டண்ட்டுக்கே 6 மாசமா சம்பளம் கொடுக்க முடியல. அவங்க எல்லாரும் போயிட்டாங்க. அப்போ சூட்டிங் ஆரம்பிக்குது. நான் உள்ளே வர்ரேன். கன்னிராசி தான் முதல் படம். அப்படித் தான் உள்ளே போறேன். அதுக்கு அப்புறம் ஆண்பாவம். அது பெரிய பேரைக் கொடுத்துடுச்சு. இவரு யாரு தெரியுமா? ஆண்பாவம் அசிஸ்டண்ட்டுன்னு சொன்னாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.