இவர் இயக்கிய மூன்று படங்களுமே வேற லெவல் தான்..! பட்டையைக் கிளப்பி வரும் இயக்குனர்...!
இயக்குநர் ராம்குமார் என்றாலே நம் நினைவுக்கு வருவது முண்டாசுப்பட்டி தான். இவர் இதுவரை யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாதவர். திருப்பூரைச் சேர்ந்தவர்.
இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தைக் கொண்டது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 3 படங்களைச் சொல்லலாம். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
முண்டாசுப்பட்டி
தமிழ்சினிமாவில் ஒரு சூப்பரான முழுநீள நகைச்சுவை படம் என்றால் அது முண்டாசுப்பட்டி தான். காட்சிக்குக் காட்சி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும். அதற்கு முக்கிய காரணம் படத்தில் நடிகர்களைத் தேர்வு செய்த விதம் தான்.
படம் முழுவதும் கொஞ்சம் கூட சலிப்பே தட்டாது. நம்மை அழகாக ரசிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம். கதைகளமே இந்தப்படத்தின் வெற்றிக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட். 1970-80களில் நடக்கும் கதை. அப்போது எப்படிப்பட்ட கடைகள், இடங்கள், டிரஸ்கள், பாடல்கள் இருந்தன என அந்தக் காலகட்டத்திற்கே சென்றது போன்ற ஒரு உணர்வை படம் ஏற்படுத்தி விடும்.
வில்லன் ரோலை எடுத்துக் கொண்டால் பக்கா காமெடியாக இருக்கும். முதலில் இந்தப் படம் ஒரு குறும்படமாகவே எடுக்கப்பட்டதாம். அதன் பிறகு தான் முழுநீள காமெடி படமானது. படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் இசை.
கதை நாயகன் விஷ்ணு விஷாலுடன் முனிஸ்காந்த், காளி வெங்கட், ஆனந்தராஜ் ஆகியோர் பிரமாதமாக நடித்து இருந்தனர். நாயகியாக நந்திதா நடித்து இருந்தார்.
ராட்சசன்
படத்தின் பெயருக்கேற்ப கதை களம் அமைந்து ரசிகர்களைக் காட்சிக்குக் காட்சி இருக்கையின் நுனிக்குக் கொண்டு சென்று விட்டது.
இது ஒரு சைக்கோ திரில்லர் கதை. சுவாசியமான திரைக்கதையாக அமைந்தது இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். அதே போல ஜிப்ரானின் பின்னணி இசையும் அருமை.
விஷ்ணு விஷாலின் நடிப்பு செம. படத்திற்காக பிட்டான போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். சரவணன், வினோத்சாகர் ஆகியோரும் அருமையாக நடித்துள்ளனர்.
3வது படம்....வால் நட்சத்திரம்?
மேற்கண்ட இரு படங்களையும் நாம் உற்று நோக்கினால் ஒன்றுக்கொன்று எவ்வித சாயலும் இருக்காது. அந்த அளவு மெனக்கிட்டு படத்தை எடுத்திருப்பார். அதே போல தான் தனது 3வது படத்தையும் எடுத்து வருகிறார். இது தனுஷ் நடிக்கும் படம். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
இன்னும் இந்தப் படத்திற்குப் பெயரிடப்படவில்லை. இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். இந்தப் படத்திற்கு இதனால் தான் காலதாமதமாகிறது. படத்தின் பெயர் வால் நட்சத்திரம். இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்காக படம் திட்டமிடப்பட்டு வருகிறது. அதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்படுமாம். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
ராம்குமாருடன் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்தப்படம் என்று இன்னும் தெரியவில்லை.