Jananayagan: பாசாங்கான நீதி தான், அநீதியின் மிக மோசமான வடிவம் – விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இயக்குனர்

Published on: January 8, 2026
பாசாங்கான நீதி தான், அநீதியின் மிக மோசமான வடிவம் - விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இயக்குனர்
---Advertisement---

விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் ஜனநாயகன். விஜயின் இறுதிப் படம் என்று கூறப்படும் அப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ என பலர் நடித்துள்ளனர். பகவத் கேசரி ரீமேக் ந சொல்லப்படும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். பொங்கலையொட்டி ஜனவி 9ம் தேதி அதாவது நாளை வெளியாகும் என்று கூறப்பட நிலையில் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காரணம் படத்திற்கான தனிக்கை சான்றிதழ் இன்னும் கிடைத்தபாடில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அரசியல் கட்சி துவங்கியதால் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் தரப்படுகிறது என கூறப்படுகிறது. ஜெயம்ரவி உள்ளிட்ட சிலர் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக தங்களது கருத்தினை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் விஜய்க்கு ஆதரவாக தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் பாசாங்கான நீதி தான், அநீதியின் மிக மோசமான வடிவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read