Connect with us

Cinema History

எஜமான் படத்துல துண்டு ஸ்டைல் உருவானது எப்படி? சுவைபட சொல்கிறார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

ஆர்.வி.உதயகுமார் ஒரு சிறந்த இயக்குனர். தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். 80களில் இவரது படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். இவர் தன்னோட திரையுலக அனுபங்களையும், ரஜினியுடன் செய்த எஜமான் படத்தைப் பற்றியும் சொல்கிறார்.

ரஜினி சாரு கூட ஒரு தடவை பழகிட்டா அவரை கடைசி வரை மறக்க மாட்டாங்க. எந்த ஒரு மனிதனும் ஒரு அளவுக்கு மேல புகழ்ச்சியும் உயர்வும் வரும்போது தன்னை ரொம்ப தாழ்த்திக்கிடுவாரு. சாதாரணமாத் தான் இருப்பாரு. அவரு கூட நாம படம் பண்ணும்போது ஒரு நல்ல அனுபவமா இருக்கும். நான் ரொம்ப அவரை டார்ச்சர் பண்ணியிருக்கேன்.

அப்போ திரைப்படக்கல்லூரியில இருந்து வந்த இன்ஸ்டிட்யூட் டைரக்டர்ஸ்னு சொல்வாங்க. அதுல நான் தான் வந்து பெரும்பாலும் எல்லா பெரிய நடிகர்களையும் வச்சிப் படம் எடுத்துருக்கேன். பிரபு, கார்த்திக், விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அர்ஜூன், சரத்குமார், சிவாஜி சார்.

சின்னக்கவுண்டர் படம் ரிலீஸாகும்போது ரஜினிசாரோட மன்னனும் ரிலீஸாகுது. பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்கு. இரண்டு படங்களுக்கும் போட்டி. அப்ப வந்து திடீர்னு ஒருநாளு ரஜினி சாரு வீட்ல இருந்து போனுன்னு சொன்னாங்க மிஸஸ்.

உடனே போன எடுத்தேன். நான் தான் ரஜினிகாந்த் பேசுறேன்னாரு. உங்க படம் நல்லா போயிக்கிட்டுருக்குன்னு கேள்விப்பட்டேன். ஆமா சார் நம்பர் ஒன் மன்னன். நம்பர் டூ சின்னக்கவுண்டர். இல்லல்ல இல்ல…நம்பர் ஒன் சின்னக்கவுண்டர். நம்பர் டூ தான் மன்னன்னாரு. இல்ல சார்…இல்லல்ல…எனக்கு எல்லா தியேட்டர்லயும் ரிப்போர்ட் வந்துருச்சி.

அந்த மாதிரி தன்னோட படத்தைப் பெரிய இதாவோ உயர்வாகவோ காட்டிக்கிடவே மாட்டாரு. அதே சமயத்துல அடுத்தவங்களுக்குக் கொடுக்கக்கூடிய அங்கீகாரத்தையும் கொடுப்பார்.

நான் கூட மரியாதை நிமித்தமாகத் தான் பேசுறாருன்னு நினைச்சேன். ஆனா அவரு எல்லா தியேட்டர்லயும் கலெக்ஷன் ரிப்போர்ட்ட எடுத்துட்டு சின்னக்கவுண்டர் தான் நம்பர் ஒன். அப்புறம் தான் மன்னன். அப்படின்னு பேசுனாரு.

ரஜினி சார் படங்களின் வரிசையில் எஜமான் படத்தைப் பார்க்கும்போது அது எந்தக் கேட்டகரியிலும் சேராது.

அவருக்கிட்ட வந்து நான் படம் பண்ணும்போது கேட்ட கேள்வி…ரஜினி சார் படத்துல நான் டைரக்ட் பண்ணனுமா…இல்ல…ஆர்.வி.உதயகுமார் படத்துல நீங்க நடிக்கணுமா…ங்கறது தான். ரெண்டும் ஒண்ணு தானேன்னாரு.

ஏன்னா ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷன்னா ஆர்.வி.உதய குமார் டைரக்ஷன் தான். நான் எப்படி பண்றேனோ நீங்க எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. நான் கதை மட்டும் சொல்வேன். நீங்க இன்வால்வ் பண்ணக்கூடாது.

yejamaan

ரஜினி சார் படம்னா யார் வேணுன்னாலும் பண்ணலாம். ரஜினிசார் பேட்டர்ன் என்னன்னா…ஒரு பைட், ஒரு பாட்டு இருக்கும். அப்புறம் தங்கச்சி சென்டிமென்ட் இல்லன்னா அம்மா சென்டிமென்ட், இல்லன்னா பிரண்ட் சென்டிமென்ட்..அப்புறம் ஒரு கிளைமாக்ஸ்…இதான் ரஜினி படத்தோட செட் பேட்டர்ன்.

அது யாரு வேணாலும் பண்ணலாம் சார். அதுவும் நான் பண்ணத் தயார். யு டெல் மீன்னு சொன்னேன். ரொம்ப யோசனை பண்ணாரு. நான் நாளைக்கு சொல்றேன்னாரு.

அப்புறம் அடுத்த நாளு நான் உதயகுமார் படத்துல நடிக்கிறேன்னாரு. அப்படின்னா ஒண்ணு சார். நான் என்ன சொல்றேனோ அதைத் தான் கேட்கணும் அப்படின்னுட்டு ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை தான் எஜமான்.

அந்தக் கதை கேட்டு ரொம்ப சந்தோஷம். அந்த எஜமான்கற டைட்டிலே வந்து பிக்கஸ்ட் எனி ஒன். அதாவது டாப். எஜமானன்னா சிவபெருமான். வேற ஒண்ணுமில்ல. அது வந்து மக்களுக்காக வாழற எஜமான். அது வந்து ஒரு உண்மையான கேரக்டர்.

வானவராயன்னு ஒருத்தர் இருந்தாரு. தன்னோட குடும்ப நண்பர். கோவையில இருக்காரு. அவருக்கிட்ட பெர்மிசன் வாங்கி அந்தப் பேரை ரஜினிசாருக்கு வைக்கிறேன். அவரு வீட்டுலயே சூட்டிங்.

R.V.Uthayakumar

நிறைய நல்ல அனுபவங்கள். அவரு சொன்னாரு . அவுட்டோரே வரமாட்டேன்னு. இங்க எங்கயாவது செட் போட்டு எடுத்துருவோம்னாரு. இங்கெல்லாம் பண்ண முடியாது. அந்த ரியாலிட்டியக் கொண்டு வர முடியாது. எஜமானன்னா என்ன? எதனால உயர்ந்தவன். அதாவது கொடுக்கறதாலயும், அடுத்தவங்கள புரிஞ்சுக்கிடறத னாலயும், சேவை பண்றதாலயும் இல்ல.

ஒரு நாளு எனக்கு நைட்லெ;லாம் திங்கிங். பிரண்ட்ஸ் எல்லாம் கேட்டாங்க. ஏ…ரஜினி என்னப்பா ஸ்டைலுன்னாங்க…? என்ன பஞ்ச் டயலாக்குன்னு கேட்டாங்க…இந்தப்படத்துல பஞ்ச் டயலாக் எல்லாம் கிடையாது. இந்தப்படத்துல ஸ்டைலே கிடையாது. அப்படின்னேன். எல்லாரும் அப்செட் ஆகிட்டாங்க.

இதுல என்னத்தை ஸ்டைல் பண்றதுன்னு அப்படியே யோசிச்சிப் பார்த்தேன். துண்டை வச்சி ஏதாச்சும் பண்ணலாமேன்னு யோசிச்சேன்.

yejamaan Rajni, Meena

நைட் சூட்டிங் முடிச்சு ரஜினி வீட்டுக்குப் போகும்போது கூப்பிட்டேன். என்னன்ணே…எனக்கே குத்துது. ரொம்ப உதயகுமார் படமாயிட்டுன்னா அசிங்கமாப் போயிடும்…னு சொன்னேன். நீங்க தானே வேணான்னு சொன்னீங்கன்னாரு. துண்டை வச்சி ஏதாச்சும் பண்ணேன்னு சொன்னேன்.

அதை வச்சி என்ன சார் பண்றதுன்னாரு. ஏதாச்சும் ஒன்னால பண்ண முடியும். திங் பண்ணுங்க…அப்புறம் ரெண்டு மூணு நாள் டைம் கேட்டாரு. மூணு ஸ்டைல்ல துண்டை வாங்கிட்டு வரச் சொன்னாரு. அதெல்லாம் காஸ்டியூமர் வாங்கிக் கொடுத்துட்டாரு.

ஒரு துண்டுக்குக் கஞ்சிப் போட்டு…ஒரு துண்டுக்குக் கஞ்சி போடாம… ஒரு துண்டு ரொம்ப ஸ்ட்ரிஃபா…ஒரு துண்டு பெரிசா…ஒரு துண்டு சிறிசா…இந்த மாதிரி அஞ்சாறு பேட்டர்ன். அவரு டெய்லி அதைப் பார்த்துக்கிட்டே இருப்பாராம். அதுக்கு அப்புறம் ஒன் வீக் இருக்கும். சார்…உதயகுமார் சார்…நான் ஒண்ணு செய்யுறேன்…நீங்க பாருங்க…ன்னாரு.

பார்த்த உடனே அவரு துண்டை எடுத்தாரு. டப டபன்னு சுழட்டிப் போட்டாரு. இதெப்படி இருக்குன்னாரு. இது அவரேக் கண்டுபிடிச்சது. நான் ஏதோ செய்யணும்னு தான் கேட்டுருந்தேனே தவிர நீங்க இதைப் பண்ணலாம் என்றதுக்காக அவர்

அவ்ளோ சின்சியரா ட்ரை பண்ணிருக்காரு. அப்புறம் பாதிப் படங்கள் எடுத்துட்டேன். அதுக்கு அப்புறம் அவர் டயலாக் பேசுறதுக்கு முன்னாடி இந்த ஷாட் போட்டா நல்லாருக்கும்னு எடுத்தேன்.

அப்பல்லாம் இந்த மானிட்டர் கிடையாது. நாம எடுத்ததை திருப்பிப் போட்டுப் பார்க்க முடியாது. நான் வந்து எந்த இடத்துல ஷாட் எடுத்தேன்கறதை ஞாபகம் வச்சி அத்தனை இடங்களயுமே அதை இன்சர்ட் பண்ணினேன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top