More
Categories: Cinema History Cinema News latest news

சிவாஜி படத்தால் பல பஞ்சாயத்துக்களை சந்திச்சிருக்கேன்… சிறுவயதில் எஸ்.ஏ.சிக்கு நடந்த சம்பவம்!…

தமிழில் உள்ள மிகப்பெரிய நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் விஜய். வரிசையாக ப்ளாக் பஷ்டர் ஹிட் கொடுக்கும் விஜய் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விஜய் இவ்வளவு பெரிய கதாநாயகனாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் சிறு வயதாக இருக்கும்போதே அவருக்கு நடிப்பதற்கு கற்றுக்கொடுத்து அவரது திரைப்படங்களில் விஜய்க்கு வாய்ப்பு கொடுத்தார் சந்திரசேகர்.

Advertising
Advertising

இதனால் சிறு வயதிலேயே நடிப்பதற்கு, நடனமாடுவதற்கு என கற்றுக்கொண்டார் விஜய். எஸ்.ஏ சந்திரசேகரும் தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த முக்கியமான இயக்குனர் ஆவார். முக்கியமாக இவர் விஜயகாந்தை வைத்து அதிக படங்களை இயக்கியுள்ளார்.

சமூக பிரச்சனைகளும் சந்திர சேகரும்:

எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கும் பல படங்கள் சமூக பிரச்சனைகளை பேசும் விதத்தில் இருக்கும். ஒரு பேட்டியில் அவரிடம் பேசும்போது அதிகமாக சமூக பிரச்சனைகள் குறித்து பேசும் படத்தை எடுப்பதற்கு காரணம் என்ன? என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த எஸ்.ஏ சந்திரசேகர், சிறு வயது முதலே எனக்கு சமூக பிரச்சனைகளை கண்டால் கோபம் வந்துவிடும். நான் எட்டாவது படிக்கும் காலத்திலேயே எனது நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்தில் நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு போராடுவோம். இதனால் ஊர் பஞ்சாயத்தில் போய் நிற்கும் நிலையெல்லாம் ஏற்பட்டது.

நான் எனது 11 வயதில் எங்கள் ஊரில் பராசக்தி படத்தை பார்த்தேன். அது எனது மனநிலையில் பெரும் மாற்றத்தை தொடர்ந்தது. அப்போது முதல் சமூக பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கிவிட்டேன் என தன் பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 10 வருஷத்துக்கு பிறகு இது நடந்திருக்கு.. ஒன்னு ஒன்னா வரும்.. விஜய்யை பற்றி எஸ்.ஏ.சி கூறிய ரகசியம்..

Published by
Rajkumar

Recent Posts