விஜயகாந்தை வைத்து 18 படங்கள்!.. கேப்டனை ஸ்டாராக மாற்றிய எஸ்.ஏ.சந்திரசேகர்..

by சிவா |   ( Updated:2024-03-29 05:32:05  )
sac
X

Vijayakanth: விஜயகாந்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த இயக்குனர்களில் முக்கியமான நபராக பார்க்கப்பட்டவர் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர். 19 படங்களில் இணைந்து இவர்கள் இருவரும் வெற்றிக்கனியை கூட்டாக ரசித்திப்பார்த்தவர்கள். மேலும் விஜயகாந்தின் துவக்க காலங்களில் எஸ்.ஏ.சந்திரசேகரின் பங்களிப்பும் மிக மிக முக்கியமானதாகவே அமைந்தது.

1981ம் ஆண்டு வெளிவந்த "சட்டம் ஒரு இருட்டறை"யே இந்த கூட்டணியின் முதல் படமானது. பின்னர் 'நெஞ்சில் துணிவிருந்தால்" இரண்டாவது படமாகவும் வெளிவந்தது. அதனை அடுத்து "நீதி பிழைத்தது" அடுத்தது "ஓம் சக்தி" என தொடர்ச்சியாக இவர்கள் இருவரும் இணைந்த வண்ணமே இருந்த்து வந்தனர் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்தவை சூப்பர் ஹிட் ஆகிவந்தாலும் எஸ்.ஏ.சி.க்கு முக்கியத்துவம் தருவதை விஜயகாந்த் தவிர்த்ததில்லை.

இதையும் படிங்க: விஜயகாந்த் நடித்து பீதியை கிளப்பிய திரில்லர் படங்கள்!.. மறக்க முடியாத ஊமை விழிகள்!…

'பட்டணத்து ராஜாக்கள்", "சாட்சி" போன்ற படங்கள் அதிகமாக பேசப்பட்டது. தனித்தனியே தங்களுக்கென ரசிகர் கூட்டங்களை தனித்தனியே வைத்திருந்த இவர்கள் இருவரும் இணையும் படங்கள் எதிர்ப்பார்ப்பை அதிகம் கிளப்பத்துவங்கியது. 1984ம் ஆண்டு வெளிவந்த "வெற்றி", "வீட்டிற்கு ஒரு கண்ணகி" அதனை தொடர்ந்து வந்த "குடும்பம்" என தொடர்ச்சியாக வெளிவர அந்த ஒரே ஆண்டில் மட்டும் இவர்கள் இருவரும் மூன்று படங்களை கொடுத்து தங்களது ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இதை போலவே 1985ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் இரண்டு படங்கள் வெளிவந்தது. "புதுயுகம்", "நீதியின் மறுபக்கம்" என பெயரிடப்பட்டு வந்த அந்த இரண்டு படங்களும் ஹிட் அடித்தது. தொடர்ந்து "எனக்கு நானே நீதிபதி". "வசந்த ராகம்", "சட்டம் ஒரு விளையாட்டு, என வரிசையாக படங்கள் திரைக்கு வர, "ராஜநடை" , "ராஜதுரை", "செந்தூரபாண்டி' படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்தது.

இதையும் படிங்க: ஓடும் காருக்குள் கேப்டன் விஜயகாந்த் செய்த ரகளை!.. அவர் அப்பவே அப்படித்தானாம்!

அதில் "செந்தூரபாண்டி" படத்தில் விஜய் நடித்திருப்பார். அவரது சினிமா வாழ்வில் மிகமிக முக்கியமான படமாக பார்க்கப்பட்ட இந்த படம் வெளிவரும் போது விஜயகாந்த், ரஜினி, கமல்ஹாசன் போல உச்சத்தில் இருந்து வந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கொண்டிருந்த அளவு கடந்த பாசத்தின் காரணமாக இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க கேப்டன் சம்மதித்ததாக பார்க்கப்பட்டது.

இதனை போலவே சூர்யாவின் வளர்ச்சிக்கு உதவும் விதமாக "பெரியண்ணா" படத்தில் விஜயகாந்த் நடித்தார். அறிமுக காலத்தில் இருந்து வந்த சூர்யாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கப்பட்டது. ஆக மொத்தமாக பதினெட்டு படங்களை விஜயகாந்தை வைத்து இயக்கி இருக்கிறார். "நீதி பிழைத்தது" படமும் சந்திரசேகர் இயக்கத்தில் வந்ததாக பார்க்கப்பட்டாலும், அது இயக்குனர் சங்கரின் படைப்புகளில் ஒன்றாகும்.

Next Story