விஜயகாந்த் என்றால் முரட்டு மனிதர் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அவருடன் பழகியவர்களுக்கு மட்டுமே அவர் குழந்தை மனம் கொண்டவர் என்பது தெரியும். அவருக்கு கோபப்பட மட்டுமே தெரியும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு பாசக்காரர் என்பது பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
கொடுத்து சிவந்த கரம் என சொல்வார்கள். அப்படிப்பட்டவர்தான் விஜயகாந்த். மதுரையிலிருந்து எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்த பல அவமானங்களை சந்தித்து வாய்ப்புகள் கிடைத்து முன்னேறியவர் இவர். சினிமாவில் வாய்ப்பு என்பது விஜயகாந்துக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை.
இதையும் படிங்க: நடிகர்களோட கடைசி படங்கள் பற்றி பார்ப்போமா?!.. மறக்க முடியாத சிவாஜி – விஜயகாந்த்
அவரை ஹீரோவாக போடக்கூடது என பலரும் எதிர்ப்பு தெரிவிதனர். விஜயகாந்துடன் ஜோடி போட்டு நடிக்க மாட்டேன் என 80களில் பிரபலமாக இருந்த ஸ்ரீபிரியா, ராதிகா, ராதா, அம்பிகா போன்ற நடிகர்கள் சொன்னார்கள். ஆனால், யாரெல்லாம் அப்படி சொன்னார்களோ அவர்கள் எல்லோரும் பின்னாளில் விஜயகாந்துடன் நடித்தார்கள்.
விஜயகாந்துக்கு என ஒரு நண்பர் கேங் இருந்தது. ராதாரவி, வாகை சந்திரசேகர், பாண்டியன், தியாகு என சிலர் இருந்தனர். எங்கு போனாலும் இவர்கள் ஒன்றாகவே போவார்கள். மாலை படப்பிடிப்பு முடிந்ததும் சந்திரசேகரின் வீட்டில் எல்லோரும் ஒன்று கூடி சீட்டு விளையாடி பொழுதை கழிப்பார்கள்.
இதையும் படிங்க: மேக்கப் டெஸ்ட் எடுத்தும் நடிக்காமல் போன விஜயகாந்த்!… அவமானத்தில் நொந்துபோன கேப்டன்!..
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகனின் திருமணத்திற்கு விஜயகாந்த், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், பாண்டியன், வாகை சந்திரசேகர் ஆகியோர் காரில் ஹோட்டல் புகாரிஸுக்கு சென்றனர். அப்போது டிரைவரிடம் ‘புகாரிஸுக்கு போ’ என்பதை தப்பு தப்பாக சொல்லி இருக்கிறார் பாண்டியன்.
உடனே ராதாரவி ‘புஹாரிஸ்-னு கரெக்ட்டா சொல்லுடா’ என சொல்ல ‘புஹாரிஸ். புஹாரிஸ்.. புஹாரிஸ்’ என பின்னால் யாரோ முனுமுனுத்துக்கொண்டார்கள். திரும்பி பார்த்தால் அது விஜயகாந்த். ‘என்னாப்பா?’ என் ராதாரவி கேட்க ‘அடுத்தது நான் அதை சொல்லுவேன். என்னையும் கிண்டலடிப்பீங்க. அதான் சொல்லி பிராக்டிஸ் பண்றேன்’ என சொல்லி குழந்தை போல் சிரித்தாராம் கேப்டன். இந்த தகவலை ராதாரவி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.