தமிழ் சினிமாவில் 5 வயது முதலே நடித்து வருபவர் கமல்ஹாசன். பல திரைப்படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டவர். நடிப்பு, நடனம், இயக்கம், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர். தமிழ் சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர்.
அதனால்தான் அவருக்கு கலைஞானி மற்றும் உலக நாயகன் என்கிற பட்டமெல்லாம் கிடைத்தது. ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, மகாநதி, தேவர் மகன், விஸ்வரூபம், தசாவதாரம் என தமிழ் சினிமாவின் முக்கிய படங்களை எடுத்தவர்.
இதையும் படிங்க: உலகநாயகனு சொல்லிட்டு உள்ளூர் நாயகன் சம்பளத்தை கூட கொடுக்கலடா – ‘இந்தியன்2’வில் பரிதாப நிலையில் கமல்
சினிமா வியாபாரத்தை பொறுத்தவரை கமல் எதையும் கணக்குபோட்டு செய்பவர். நல்ல வியாபாரி என திரையுலகில் சொல்வார்கள். அதை விக்ரம் படத்திலேயே நாம் புரிந்து கொள்ளமுடியும். விக்ரம் திரைப்படம் கமலுக்கு அவரின் திரையுலகில் கிடைக்காத வெற்றியையும், லாபத்தையும் கொடுத்தது. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்திருந்தது.
இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம், சிம்புவை வைத்து ஒரு படம் என பிஸியான தயாரிப்பாளராகவும் கமல் மாறிவிட்டார். ஒருபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிஸியாகிவிட்டார். கமல்ஹாசன் நடிப்பில் சரண் இயக்கி 2004ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.
இதையும் படிங்க: கமல், இளையராஜா சொல்லியும் நடிகையிடம் டெரர் காட்டிய பாலா!.. அவர் அப்பவே அப்படித்தானாம்!..
இந்த படம் முடிந்ததும் சரண் தனது ஜெமினி புரடெக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்து கொடுக்கும்படி சொல்லி கமலுக்கு சில கோடிகள் அட்வான்ஸ் கொடுத்தார். கமலும் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால், அந்த படத்தை அப்படியே மற்றொரு தயாரிப்பாளருக்கு கை மாத்திவிட்டு அதிக லாபம் பெற்றார் சரண்,
இதை அறிந்து கடுப்பான கமல்ஹாசன் அந்த படத்திலேயே நடிக்கவில்லை. அதோடு, அந்த அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுக்கவில்லை என திரையுலகில் சொல்லப்படுகிறது. சரண் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்களை இயக்கியவர். விக்ரமை வைத்து ஜெமினி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினி பட இயக்குனருக்கு ரூட்டு போட்ட கமல்!.. ஹிட் பட இயக்குனர்களை தட்டி தூக்கும் உலகநாயகன்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…